பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை.. எப்போது தெரியுமா?சூப்பர் அப்டேட் இதோ..!

Web Ads

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Pooja of Mookkutty Amman 2 movie which is going to be grand Update
Pooja of Mookkutty Amman 2 movie which is going to be grand Update

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கி நடித்து இருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அம்மன் கெட்டபில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்தப் படம் OTT யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திலும் நயன்தாராவை அம்மனாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை மார்ச் 6ஆம் தேதி பிரசாத் ஸ்டுடியோவின் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல் அம்மன் சிலை அமைத்து அன்னதானம் ஏற்பாடு செய்து பிரம்மாண்டமாக பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pooja of Mookkutty Amman 2 movie which is going to be grand Update
Pooja of Mookkutty Amman 2 movie which is going to be grand Update