ஹிந்தி மொழி குறித்து, பவன் கல்யாண்-பிரகாஷ் ராஜ் இணையதள மோதல்
தமிழ் மொழிக்காக உயிர் துறந்தவர்கள் வரலாற்றை விட, தமிழ் சினிமா நடிகர்களின் வரலாறு தெரிந்தவர்கள் அதிகம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு, இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்? என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில், பவன் கல்யாணின் இந்த பேச்சுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர்,
‘உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள். என்பது, அந்த மொழியை வெறுப்பதால் அல்ல. அது, எங்கள் தாய் மொழியையும், நம் பாரம்பரியத்தையும் பெருமையுடன் காக்க விரும்புவதற்காகவே. இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசிகள், ‘பணக்கார குழந்தை படித்தால் விருப்பமொழியாம், அதே ஹிந்தியை ஏழை படிக்க விரும்பினால் திணிப்பு மொழியாம்’ என அவரவர் எண்ணங்களுக்கேற்ப கருத்து பதிதல் தொடர்கிறது.