Web Ads

‘பறந்து போ’ படம் குறித்து இயக்குனர் ராம் மற்றும் மதன் கார்க்கி அப்டேட்ஸ்

‘பறந்து போ’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்..

தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்கும் இபபடத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ராம் கூறும்போது, “இந்தப் படத்துக்கு முதலில் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பதாக இருந்தார். அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்துக்கு 20 பாடல்கள் தேவைப்பட்டது. யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்துக்குள் வந்தார். சிவா, கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி’ என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவிக்கையில், ‘இயக்குநர் ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்துக்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. நடிகர் சித்தார்த் இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு – போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு, படம் முழுவதும் இருக்கும். என்னுடைய ஆயிரமாவது பாடலை இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன்” என்றார்.

paranthu po movie director ram updates