Pandian Stores Meena about Pregnancy
Pandian Stores Meena about Pregnancy

சீரியலில் நடப்பது மட்டுமல்ல உண்மையில் அதுதான் உண்மை என இது ஒரு நல்ல செய்தியை கூறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் மீனா.

Pandian Stores Meena about Pregnancy : தமிழ் திரையுலகில் பாயும் புலி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஹேமா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் வாய்ப்பு குறையத் தொடங்கியதும் சின்னத்திரை பக்கம் தாவினார்.

அந்த ஹேமா வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நீலிமா ராணி.. புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு – காரணம் என்ன?

தற்போது இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஹேமாவும் அவரது கணவரும் வீடியோவில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தனர்.

அதில் பேசிய ஹேமா முதல் படத்திலேயே பெரிய இயக்குனரான சுசீந்திரன் அவர்களுடன் பணியாற்றியது தனக்கு மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் அனுபவங்களை கேட்டுவிட்டு இவரிடம் குட் நியூஸ் ஏதாவது உண்டா என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு ஹேமா சிரித்துக் கொண்டே சீரியலில் மட்டுமல்ல நான் நிஜத்திலும் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட முடிவு செய்திருந்தோம். அதன் பிறகு நானும் என் கணவரும் பேசி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம் என கூறியுள்ளார்.

கர்ப்பமா இருக்கிறதா சொன்னாங்க.. ஆனால் நீங்க?? சமந்தாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இன்னும் 5 மாதத்தில் உங்கள் வீட்டில் ஆணோ பெண்ணோ ஏதோ ஒன்று தவழ எங்களுடைய வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர.