சென்னையில் மட்டும் முதல் நாளில் பிகில் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பிகில்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் ரூ 1.79 கோடி வசூல் செய்துள்ளது.
இது இறுதியாக வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முதல் நாள் சென்னை வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை சென்னையில் முதல் நாளில் ரூ 1.58 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.