NGK Movie Review | Suriya | Sai Pallavi | NGK Tamil Movie Review | Kollywood CInema | Movie Reviews | Tamil Cinema News | Latest Tamil CInema News
சூர்யா செல்வராகவன் கூட்டணியில் முதல் முறையாக வெளியாகியுள்ள NGK திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம் வாங்க.

NGK Movie Review : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள திரைப்படம் NGK. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் கதை :

நந்த கோபாலனான சூர்யா நன்கு படித்து விட்டு தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்.

சில பிரச்சனையால் அவர் ஒரு எம்.எல்.ஏ வை சந்திக்கிறார், அந்த எம்.எல்.ஏ என்னுடைய கட்சியில் சேர்ந்து விடு என கூற சூரியாவும் அடிமட்ட தொண்டனாக கட்சியில் சேர்ந்து பாத்ரூமெல்லாம் கழுவி படிப்படியாக அரசியலில் வளர்கிறார்.

அதன் பின்னர் அவரின் அரசியல் வாழ்க்கை என்னவானது? அரசியலில் ஜெயித்தாரா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியதா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

சூர்யா வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார், அரசியல்வாதியாக அமர்களப்படுத்தியுள்ளார்.

சாய் பல்லவி தன்னுடைய கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார், சூர்யாவுக்கும் அவருக்கும் இடையேயான காட்சிகள் நம்மை மறந்து ரசிக்க வைக்கின்றன.

ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்துள்ளது, அவரை இந்த படம் வேறொரு தோற்றத்தில் அழகாக காட்டும் என நம்பலாம்.

மற்ற நடிகர் நடிகைகளும் தங்களின் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அழகாக கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இந்த படத்திற்கும் படத்தின் கதை பாதி பலம் என்றால் மீதி பலம் யுவன் இசை தான் என உறுதியாக சொல்லும் அளவிற்கு மாஸாக இசையமைத்துள்ளார். பாடல்களும் பிரமாதம்.

ஒளிப்பதிவு :

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஒவ்வொரு காட்சியையும் நம் கண்முன் நடப்பது போலவே படமாக்கி கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே.எல்-ன் எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது.

இயக்கம் :

செல்வராகவன் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட கோணத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இன்றைய கால இளைஞர்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வுடன் சமூக கருத்துடன் படத்தை கொடுத்திருப்பது பாராட்டக் கூடியது.

ஸ்க்ரீன் பிளேவில் மட்டும் சில இடங்களில் சிறு தடுமாற்றங்கள் உள்ளன.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. யுவனின் இசை
3. சூர்யா, சாய் பல்லவியின் நடிப்பு
4. கிளைமாக்ஸ்
5. அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்
6. சூர்யா, சாய் பல்லவிக்கு இடையேயான காதல் காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. சில லாஜிக்கல் தவறுகள்.
2. ஸ்க்ரீன் பிளேவில் சிறு தடுமாற்றம்

REVIEW OVERVIEW
NGK விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
ngk-movie-reviewமொத்தத்தில் NGK குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டாடக்கூடிய ஒரு படம். புதுப்பேட்டையை போல் 10 வருடத்திற்கு பிறகும் பேச கூடிய படமாகவும் இருக்கும்.