News Offer for Taxpayers
News Offer for Taxpayers

வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News Offer for Taxpayers : வரி செலுத்துவதற்கான சலுகை திட்டங்களை மத்திய அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. வரி செலுத்தும் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

நேர்மையாக வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார்.

வரி செலுத்துவோர் மற்றும் வரி வசூலிப்பவர் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் வரி செலுத்துவதற்கான வசதியும் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது வரி செலுத்துவதற்கான புதிய சலுகையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது அது என்னவென்றால், வருமான வரியை தாக்கல் செய்வோர் அதற்கான படிவத்தில் உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா வாயடைச்சுப் போயிடுவீங்க!

அத்தகைய தகவல்களை உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை பெரிய நிறுவனங்கள் வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை பெரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவரத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பட்டால் அது அந்நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும் தனிநபருக்கு பொருந்தாது.

உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக 26AS புதிய வடிவத்தை மத்திய அரசு 2020-21ஆம் நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.