ஞானம் ரேணுகா இடையே உருவான மோதலில் குளிர் காய்கிறார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஞானம் நடிகையை வைத்து கடை திறக்கப் போவது அறிந்த ரேணுகா இப்போ நடிகை வச்சு கடை திறக்கிறது எல்லாம் ரொம்ப அவசியமா வயசுக்கு வந்த புள்ளைய வச்சுக்கிட்டு எவ கூடயோ ஜோடி சேர்ந்து போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்க என்று சண்டையிடுகிறார். இவர்களின் சண்டையை பார்த்து குணசேகரன் மகிழ்ச்சி அடைகிறார்.
அதன் பிறகு நந்தினி அவர் முகத்துல மெச்சூரிட்டி வந்தா மாதிரி ஒரு தேஜஸ் தெரியுது இல்ல ஜெயிச்சிடுவாரு என்று சொல்ல ரேணுகா அதை மூணு நாள் கழிச்சு வந்து சொல்லு என்று ஆஃப் ஆக்குகிறார்.
அதன் பிறகு கதிர் அம்மா கிட்டயும் அண்ணா கிட்டயும் சொல்ல வேண்டாமா என்று கேட்க எதுக்கு சொல்லணும் என்று நந்தினி பதிலடி கொடுக்கிறார்.