ராதிகா வீட்டுக்கு வந்த முதல் நாளே அவமானப்பட்டு உள்ளார் ஈஸ்வரி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை வீட்டுக்குள் கூட்டி வர அதைப் பார்த்த கமலா அதிர்ச்சியடைகிறார். கமலாவும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். 

அதன் பிறகு கோபி ஈஸ்வரி உட்கார வைக்க கமலா நான் போய் காபி கொண்டு வரேன் என்று கிச்சனுக்கு போய் ராதிகாவை கூப்பிட்டு நீ வந்த சரி மாப்பிள்ளை வந்தாரு சரி அந்த அம்மா இதுக்கு வந்துச்சு உங்கள விட்டுட்டு போக வந்து இருக்கா என்று கேட்க இல்லம்மா அவங்களும் இங்கதான் இருக்க போறாங்க என்று ராதிகா நடந்த விஷயங்களை சொல்கிறார். எல்லாம் கோபி பண்ற வேலை எனவும் சொல்கிறார். 

இதைத்தொடர்ந்து கமலா அந்த அம்மா அந்த வீட்டிலேயே மகாராணி மாதிரி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் எனக்கு அது இங்கு வந்தது சுத்தமா பிடிக்கல நான் எப்படி அதை ஓட விடுகிறேன் என்று மட்டும் பாரு வார்த்தையால எதுவும் பேச மாட்டேன் என்று சொல்கிறார். 

மறுபக்கம் கோபி ஈஸ்வரியிடம் இதுவும் உங்க வீடுதான்மா நீங்க இங்க மகாராணி மாதிரி இருக்கலாம். உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராமல் நான் பாத்துக்குவேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி ராதிகாவோட அம்மாவுக்கு நான் வந்தது புடிக்கல என்ன பார்த்ததுமே அவ மூஞ்சி காத்து போன பலூன் மாதிரி ஆகிவிட்டது என்று சொல்ல கோபி அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார். 

மறுபக்கம் பாக்யா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க ஈஸ்வரி பற்றி பேச்சு வர இனிய பாட்டியால அங்க ஒரு நாள் கூட இருக்க முடியாது. பெருசா ரூம் கிடையாது, அந்த அம்மாவோட சாப்பாடு சரி இருக்காது பாட்டி கண்டிப்பா கிளம்பி வந்துடுவாங்க என சொல்ல ராமமூர்த்தி விடுடா அவருக்கு அங்கிருந்து புத்தி வரட்டும். அது வரைக்கும் நான் சந்தோஷமா இருக்கேன் என சொல்கிறார். 

அடுத்ததாக கோபி ராதிகாவிடம் அம்மாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்று சொல்ல ராதிகா மொட்டை மாடியில ஒரு ரூம் போட்டு விடலாமா என்று கேட்க கோபி அம்மாவுக்கு மூட்டு வலி இருக்கு அவங்களால மாடு எல்லாம் ஏற முடியாது என்று சொல்ல லிப்ட் வச்சுடலாம் என்று சொல்கிறார். இது நல்ல ஐடியா என்று கோபி சொல்ல கோபி நாம் இருக்கிறது பிளாட் என்று ஞாபகப்படுத்துகிறார். 

ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து இருக்க கமலா கிச்சனில் இருக்க ஈஸ்வரி எனக்கு தண்ணி வேண்டும் என்று கேட்க கமலா கண்டும் காணாமல் இருக்கிறார். திரும்பத் திரும்ப கேட்ட ஈஸ்வரி ஒரு கட்டத்தில் அவரே கிச்சனுக்கு எழுந்து வந்து ராதிகா எங்கே என்று கேட்கிறார். அவர் ரூம்ல இருக்கா என்று கமலா சொல்ல நான் தண்ணி வேணுன்னு கேட்டுட்டு இருக்கு காதுல விழலயா என்று கேட்கிறார். கமலா கேட்கல என்று சொல்கிறார். 

ராதிகாவை கூப்பிட பார்க்க அவ ரெஸ்ட் எடுக்கிற ரெஸ்ட் எடுக்கட்டும் என்று கமலா ஈஸ்வரியை தடுத்து நிறுத்துகிறார். உங்களுக்கு வேணும்னா நீங்க தான் வந்து எடுத்துக்கணும் இது ஒன்னும் ஓட்டல் இல்ல என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரி பால் இல்லையா என்று கேட்க கமலா அமைதியாகவே இருக்க ஈஸ்வரி பாலை தேட கிண்ணத்தில் இருந்த பால் கீழே கொட்டி விடுகிறது. வேற பால் இல்லையா என்று கேட்க கமலா இல்லை என்று சொல்ல ஈஸ்வரி கோபமாக வெளியே கிளம்ப இதை யார் கிளீன் பண்ணுவா என்று கமலா கேட்கிறார்.

நீ பண்ணு இல்ல உன் பொண்ண கூப்பிட்டு பண்ண சொல்லு என்று ஈஸ்வரி வெளியே கிளம்ப நீங்க வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல என்று கமலா சொல்ல நான் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு தான் வந்தேன். ஆனா எப்பவுமே நான் வந்தது பிடிக்கலைன்னு சொன்னியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே இங்கதான் இருக்க போறேன் என்று ஷாக் கொடுத்து வெளியே வருகிறார். 

அடுத்து செழியன் ஜெனியிடம் சாக்லேட்டை கிப்ட்டாக கொடுத்து இந்த மாலினி பத்தி இனிமே தயவுசெய்து பேச வேண்டாம். நான் கஷ்டப்பட்டாலும் பரவால்ல நீ அதை நினைச்சு நினைச்சு கஷ்டப்படக்கூடாது இனிமே நான் உன்னை சந்தோஷமா வச்சுக்குவேன் என்று ஜெனி இடம் மன்னிப்பு கேட்க ஜெனி செழியனுக்கு ஆறுதல் சொல்லி சாரி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.