தங்க வளையலோடு வெள்ளோடு வந்து பல்பு கொடுத்துள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் சட்டையை பார்த்து பாட்டி போகும்போது வேற சட்டை தானே போட்டிருந்த இந்த சட்டை புதுசா இருக்கு என்று கேள்வி கேட்க உடனே விஜயாவும் ரோகிணியும் ஊர்ந்து கவனிக்க முத்து ஆணிகளை மாட்டி கிழிஞ்சிடுச்சு என்று சொல்ல மீனா அதே நேரத்தில் டீ கொட்டிடுச்சு என்று சொல்கிறார். ரெண்டு பேரும் வேற வேற பதில் சொல்றீங்க என்று கேள்வி கேட்க முத்து முதல்ல டி கொட்டிடுச்சு அதை கிளீன் பண்ண போனப்ப ஆன்லைன்ல மாட்டி கிழிந்திடுச்சு என்று சொல்கிறார்.

விஜயா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு இவனுக்கு அளவெடுத்து தைச்சா மாதிரி இன்னொரு சட்டை எடுத்து வச்சிருந்தார்களா என்ன என்று கேள்வி கேட்க பாட்டி விஜயாவை ஆஃப் ஆக்குகிறார். இதனைத் தொடர்ந்து ரவி என்ன சீக்கிரம் வந்துட்டீங்க திரும்பவும் வீட்டுக்கு போவீங்களா நீங்க என்று கேட்ட இல்ல ரவி சாய்ங்காலம் அம்மாவும் தங்கச்சியும் இங்கு வருவாங்க என்று சொல்ல அவங்க எதுக்கு வராங்க என்று விஜயா கேள்வி கேட்க அது உனக்கு எதுக்கு என்று பாட்டி பதிலடி கொடுக்கிறார். அதன் பிறகு ரோகிணி மீனாவிடம் வந்து மீனா உங்க வீட்ல என்ன நடந்துச்சு முத்துவும் கோபமா இருக்காரு உங்க முகமும் சரி இல்லை என்று சொன்ன அது உங்களுக்கு எதுக்கு என்று கேள்வி கேட்க இப்போ புரியுதா உங்களோட பர்சனல்ல தலையிட்ட எவ்வளவு கோவம் வருது, அதே மாதிரி தான் மத்தவங்களுக்கும் இனிமே எங்க விஷயத்துல நீங்க தலையிடாதீங்க என்று வார்னிங் கொடுக்கிறார்.

அதன் பிறகு வீட்டை டெக்ரேட் செய்து திருமண நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் நடக்க ரவி, சுருதி வெளியே சென்று வருவதாக கிளம்பி வருகின்றனர். மறுபக்கம் சத்தியா சிட்டியை சந்திக்க சிட்டி முத்து விஷயத்துல நான் எதுவும் பண்ணல என்று பேச அப்படி சத்யா இன்னைக்கு அக்காவுக்கும் அவருக்கு கல்யாண நாள், இப்ப கூட அம்மாவும் சீதாவும் அவங்க வீட்டுக்குத்தான் செலபிரேட் பண்ண போயிருக்காங்க என்று சொல்கிறார். சிட்டி நீ போகலையா என்று கேட்க நான் வாங்கி கொடுத்த சட்டையை போடல கழட்டி போட்டுட்டு போயிட்டாரு நான் அந்த வீட்டுக்குப் போனா பிரச்சனை தான் நடக்கும் அதனால போகல என சொல்கிறார். என்னதான் இருந்தாலும் அது உன்னுடைய அக்கா உன்னுடைய மாமா நீ அங்க போய் இருக்கணும் என்று சிட்டி சொன்ன அவங்க என்ன கூப்பிடவும் இல்ல அப்படியே நாங்க போனாலும் எனக்கு மரியாதை இருக்காது என்று சத்யா சொல்கிறார். இந்த மாதிரி பங்ஷன்ல நீ போய் நின்னா தான் கோபம் குறையும், உன் அக்காவுக்கும் ஒரு மரியாதை இருக்கும் என்று சொல்லி சிட்டி பணத்தை கொடுத்து சத்யாவை தடபுடலா எல்லாத்தையும் வாங்கிட்டு போ என்று அனுப்பி வைக்கிறார். சத்யா போனா முத்து கோபப்படுவான், இவங்களுக்குள்ள பிரச்சனை நடக்கணும் அவங்க கல்யாண நாள் சந்தோஷமா போகக்கூடாது என கணக்கு போடுகிறார்.

அடுத்ததாக இங்கு பங்க்ஷன் தொடங்க ரவியும் ஸ்ருதியும் பெரிய கேக்குடன் வீட்டுக்கு வர மனோஜ் இவ்வளவு பெரிய கேக் எல்லாம் இருக்கா என்று வாயை பிளக்கிறார். அதற்காக ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வர முத்து இவங்க எதுக்கு வந்தாங்க, எல்லாரும் தள்ளிய நில்லுங்க ஏதாச்சு காணாமல் போனால் நாம தான் எடுத்தோம்னு சொல்லிடுவாங்க என சொன்னதும் முத்து அமைதியாக இரு.. ஒரு பங்க்ஷன்ல தொடங்குன பிரச்சனை இன்னொரு பங்ஷன்ல முடியும்னு தான் அவங்கள வர சொன்னேன் என்று சொல்கிறார்.

பரவால்ல சம்மந்தி அன்னைக்கு ஏதோ தெரியாம அந்த தப்பு நடந்துடுச்சு என்று சொல்லும் சுதா மீனாவுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி கிப்ட் வாங்கி வந்து இருப்பதாக தங்க வளையலை எடுக்க விஜயா வாயடைத்து நிற்கிறார். சில பேர் பெத்த பொண்ணுக்கே ஒன்னும் பண்ணாம கைய வீசிட்டு வந்துடறாங்க ஆனா நீங்க தங்க வளையல் ஓட வந்திருக்கீங்க உங்க மனசே பெரிய மனசு தான் என்ன விஜயா மீனா அதுக்கு குடும்பத்தை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். நீயும் என் பொண்ணு தான் மீனா என்று சொல்லி வளையலை போடப் போக வளையலை வாங்கிப் பார்த்த மீனா ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி ஒரு நிமிஷம் நின்று அதை கொண்டு போய் ஸ்ருதியின் கையில் போடுகிறார். என்னை விட ரொம்ப அழகா இருக்கு என்று சொல்ல அண்ணாமலை தனக்கு வந்ததை கூட மீனா உங்களுக்கு கொடுக்கிற மனசு இருக்கு பாரு அது மீனாவுக்கு தான் வரும் மருமகள்னா இப்படி இருக்கணும் என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

முதல் திட்டம் ஃபெயிலியர் ஆனதும் சுதா அடுத்ததாக என்னை இப்படி வேற்கிறது. ஹால்ல ஏசி இல்லையா நாளை நான் ஒரு பெரிய கேசட் ஏசி அனுப்பவா, என் பொண்ணுக்கு எதுவுமே செய்யல ஏசி ஆவது அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல விஜயா சந்தோஷப்பட அண்ணாமலை அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், இந்த ஆசி மட்டும் உங்க பொண்ணுக்கு இருந்தா போதும் என்று பஞ்ச் டயலாக் கொடுக்க முத்து சூப்பர் பா என்று கைதட்டுகிறார். மனோஜ் டேய் பேசுனது போதும் லஞ்ச் டைம் வந்துடுச்சு சீக்கிரம் கேக் கட் பண்ணுங்க என்று கேக் பற்றி பேசுகிறார்.

அதன் பிறகு முத்து மீனா கேக் கட் பண்ணி மாறி மாறி ஊட்டி கொண்டு மற்றவர்களுக்கு ஊட்டி விடுகின்றனர். சீக்கிரம் பீஸ் போடுங்க என்று மனோஜ் கேக் சாப்பிட அவசரப்பட நீயே வந்து விட்டு என முத்து கூப்பிடுகிறார். அடுத்ததாக மீனா கேக் கொண்டு வந்து சுதாவுக்கு கொடுக்க சுதா நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன் என்று விஜயாவிடம் கொடுத்து நான் கிளம்புகிறேன் என்று சொல்ல அண்ணாமலை கையெடுத்து கும்பிட்டு போய்ட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.