Web Ads

பூஜா ஹெக்டேவும் சமந்தாவும்: வைரலாக பரவும் நிகழ்வு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்..

அதாவது, பூஜா ஹெக்டே உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்கிறார். இது மட்டுமல்லாமல் அப்போது பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதே இடத்தில் நேற்று அதாவது ஜூன் 17-ம் தேதி நடிகை சமந்தா தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி எரிச்சலைக் கொட்டினார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நடிகைகளையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.

சமந்தா குறித்து இணையத்தில் பரவிய வீடியோவில், ‘சமந்தா ஜிம்மில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தொந்தரவு செய்துள்ளார்கள். போனில் பேசிக்கொண்டு இருந்த சமந்தாவுக்கு ரசிகர்களில் இந்த செயல் எரிச்சலைக் கொடுத்துள்ளது. இதனால் கடுப்பான சமந்தா கோபத்தில் கத்தி விட்டு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

மேலும் அந்த வீடியோவில் Stop It Guys என கத்துகிறார்”. இந்த வீடியோ நேற்று இணையத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 18ஆம் தேதி நேற்று சமந்தா கோபப்பட்ட அதே ஜிம்மின் வாசலில் நடிகை பூஜா ஹெக்டேவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனைப் பார்த்த இணையவாசிகளும் ரசிகர்களும் நேற்று சமந்தா எவ்வளவு எரிச்சல் அடைந்தார், ஆனால் பூஜா ஹெக்டே மிகவும் கூலாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோவில், காரில் இருந்து இறங்கி வரும் பூஜா ஹெக்டே ஜிம்மிற்குள் நுழைய முயற்சி செய்கிறார். அப்போது அவரை நோக்கி அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் படி கேட்கிறார்கள்.

உடனே சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே அதன் பின்னர் ஜிம்மிற்குள் செல்கிறார். அதேபோல் சமந்தா நேற்று ஜிம்மில் இருந்து வெளியேறும் போது யாரிடமோ போனில் பேசிக் கொண்டு வெளியேறினார்.

அதற்குள் சமந்தாவைப் பார்த்த ரசிகர்களும் பொது மக்களும் அவரைப் புகைப்படம் எடுக்கிறேன் என தொந்தரவு செய்துள்ளார்கள். அதனால் கடுப்பான சமந்தா, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கச் சொன்னபோது எரிச்சலாக கத்திவிட்டு காருக்குள் சென்றுள்ளார்.

சமந்தாவை கடுப்பாக்கிய பொதுமக்கள் இனிமேலாவது பிரபலங்களை தொந்தரவு செய்யாமல், அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என பேசி வருகிறார்கள்.

netizens comapares samantha and pooja hegde reaction