அஜித்துடன் நேபால் ரசிகர் எடுத்திருக்கும் செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் அஜித் குமார் இதற்கிடையில் இரண்டாவது முறையாக பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நேபாளத்தில் பைக் சுற்றுலா சென்று இருக்கும் அஜித்குமார் ரசிகர் ஒருவருடன் எடுத்திருக்கும் செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், அந்த ரசிகர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜித் எனக்கூறி அவருடன் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அதற்கு வழக்கம் போல் லைட்டான ஸ்மைலுடன் நன்றி எனக்கூறி நகர்ந்து செல்லும் நடிகர் அஜித்தின் வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.