நிழல் போல நீயும், நடை போட நானும்.. குழந்தைகளுடன் விக்கி நயன்..!
குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளும் ஒரே மாதிரி உடையை அணிந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை நயன்தாரா வெளியிட ரசிகர்கள் பலரும் அழகான குடும்பம் என்றும் இதே போல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram