நான் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு காரணம் கமல்தான்: நடிகை ஊர்வசி ஓபன் டாக்..

Web Ads

மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது.

அதில் தேசிய விருது தேர்வு, ஷாருக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத்தில் நடிக்குமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில்,

‘மரியாதைக்குரிய நண்பர் கமல். அப்படியொரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு கணிக்க முடியாத திறமையான நடிகை என்று சொன்னதால் மட்டுமே தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டேன். அதுதான் உண்மை.

தமிழில் சில படங்களில் நடித்தவுடன், என்னை மலையாள திரையுலகுக்கு போகச் சொன்னது கமல் தான். காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் எல்லாம் உங்களுக்கு பிடிப்பதில்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ் செட்டாகாது. நீங்கள் மலையாளத்துக்குச் செல்லுங்கள். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கலாம்’ என்றார் கமல். பின்புதான் மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன்’ என தெரிவித்துள்ளார் ஊர்வசி.

national award winner actress urvashi speech
national award winner actress urvashi speech