நீங்கள் பேசலாம், நான் பேசக்கூடாது: இயக்குநர் ஹெச்.வினோத் சூசகம்..

Web Ads

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் இப்பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்பபோம்..

சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ந்தேதி வெளியான படம் `மை லார்ட்’. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், ஹெச். வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். அதில் வினோத் பேசியபோது

Web Ad 2

‘மை லார்ட்’ படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் அரசியல் இருக்கிறது. அவற்றை எல்லாம் நான் பேசுவதில்லை. இந்தப் படத்தில் முத்துச்சிற்பி கதாபாத்திரம் பாதிக்கப்படும்போது தமிழ்க்குத்து பத்திரிகையாளர் வந்து காப்பாற்றுவார். அதுவே நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள்’ என கூறினார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கைச் சான்று பிரச்சினையால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் ஹெச் வினோத் இப்படி பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

my lord movie function to h vinoth speech
my lord movie function to h vinoth speech