Web Ad 2

‘கிராண்ட் ஃபாதர்’ படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் அப்டேட்ஸ்..

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வெளியான ”பார்க்கிங்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படம் பற்றிப் பார்ப்போம்..

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

ஃபேன்டஸி, ஆக்‌ஷன், டிராமா, ஹாரர், காமெடி என அனைத்தும் சேர்ந்த கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல். இதில் தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா, அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக சந்தானம், இசையமைப்பாளராக ரஞ்சின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்படம் பற்றி எம்.எஸ்.பாஸ்கர் தெரிவிக்கையில், இந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கும். இதுவரை ஏற்றிராத கேரக்டரில் நடித்திருக்கிறேன். ரசிக்கத் தகுந்த வகையில் இருக்கும்’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ms paskar act in the god father movie update
ms paskar act in the god father movie update