ஐஸ்வர்யாராயுடன் விவாகரத்தா?: அபிஷேக்பச்சன் செம கூலாக விளக்கம்..
ஐஸ்வர்யா ராயின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் தன் மகள் ஆராத்யா பற்றி சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்..
அதாவது, ஐஸ்வர்யா ராய் மகளுக்கு 14 வயது. ஆராத்யாவிடம் செல்போன் இல்லை
அபிஷேக் பச்சனும், அவரின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப் போகிறார்கள். இருவருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என அடிக்கடி பேசப்படுகிறது. விவாகரத்து விஷயத்தில் உண்மை இல்லை. நானும், ஐஸ்வர்யா ராயும் பிரியவில்லை என அபிஷேக் பலமுறை விளக்கம் அளித்தும் அந்த பேச்சு மட்டும் தொடர்கிறது.
இந்நிலையில், அபிஷேக் கூறியதாவது, ‘ஆராத்யாவுக்கு 14 வயதாகிறது. அவரிடம் செல்போன் கிடையாது. ஆராத்யாவுக்க இதெல்லாம் தெரியாது. ஆனால், அவர் ரொம்ப மெச்சூரான குழந்தை. ஆராத்யாவை அற்புதமாக வளர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். விவாகரத்து வதந்தி அவருக்கு தேவையில்லாத விஷயம். அது பற்றி அவருக்கு தெரியாது என நினைக்கிறேன். ஆராத்யாவுடன் பேச வேண்டுமென்றால் அவரின் தோழிகள் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்வார்கள்.
ஆராத்யாவுக்கு போன் கொடுக்க வேண்டாம் என்று நானும், ஐஸ்வர்யாவும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம். படிப்புக்காக ஆராத்யாவுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி உண்டு. அவர் தன் பெற்றோர் பற்றிய செய்திகளை எல்லாம் இன்டர்நெட்டில் தேட மாட்டார். எங்களின் விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. மக்களாக கதை கட்டிவிடுகிறார்கள். நிஜத்தில் எந்த பிரச்சனையும் இல்லை’ என்றார்.
ஐஸ்வர்யா ராய் தன் மாமனார் அமிதாப்பச்சன் வீட்டில் தான் இருக்கிறார். தினமும் காலை மகளை பள்ளியில் விட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு வருவார். மாலை கிளம்பிச் சென்றுவிடுவார் என்று பிருந்தா வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இயக்குநர் பிரஹலாத் காக்கர் தெரிவித்துள்ளார்.

