சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினிக்கு போன் போட்டு தாய்க்குலத்தை பார்க்க யாராவது வந்தாங்களா உன்கிட்ட ஏதாவது பேசினார்களா என்று கேட்க எதுவும் இல்லை என சொல்லுகிறார் சரி யாராவது வந்து பார்த்தாங்கன்னா என்கிட்ட சொல்லு என சொல்லி போனை வைக்க கொஞ்ச நேரத்தில் சுந்தரவல்லி பார்க்க வக்கீல் வருகிறார். நீங்க சொன்ன மாதிரி டாக்குமெண்ட் ரெடியாயிடுச்சு என்று சொல்லிக் கொடுக்கிறார். சுந்தரவல்லி சந்தோஷப்பட்டு சரி நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்புகிறார். பிறகு கல்யாணத்தை கூப்பிட்டு உனக்கு சம்பளம் கொடுக்கிற விஷயமா கையெழுத்து போடணும் படிச்சு பார்த்து போடு என்று சொல்ல எனக்கு எங்கம்மா படிக்க தெரியும் நீங்க சொன்னா சரியா இருக்கும் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு நீ போய் அவளை வர சொல்லு என்று சொல்லி அனுப்புகிறார். உடனே நந்தினி வந்து நிற்க உன்னோட சம்பளம் விஷயமா கையெழுத்து போடணும் அதுல ஒரு பத்து இடத்தில உன்னோட கையெழுத்தை போடு என்று சொல்ல நந்தினியும் போடுகிறார்.
நீ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறியா நான் இவ கிட்ட டைவர்ஸ் பேப்பர்லயே கையெழுத்து வாங்கிட்டேன் இதுக்கு மேல உன்னால ஒன்னும் பண்ண முடியாது என சொல்லுகிறார். பிறகு ஆஃபீஸ்க்கு வந்த வக்கீல் நாளைக்கா உங்க வைபை ரிஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு வந்துருங்க நாளைக்கு பண்ணி முடிச்சிடலாம் என்று சொல்லிவிட்டு சென்ற விடுகிறார். சூர்யா இன்னும் 24 மணி நேரத்துல எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் டாடி என்று சொல்லி சூர்யா சந்தோஷப்படுகிறார். இத்தனை வருஷமா நான் இருக்கேன் ஒருவாட்டி கூட கையெழுத்து கேட்கல, இப்போ என்ன புதுசா இருக்குன்னு தெரியல என்று சொல்ல, நீங்க இத பத்தி சூர்யா சார்கிட்டயும் ஐயா கிட்டயும் சொல்லாதீங்க இதனால பெருசா சண்டை நடக்கும்போது தோணுது என்று சொல்லுகிறார்.

சரி சொல்லல ஆனா எனக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு இடத்துல தான் கையெழுத்து போட்டேன் ஆனா உன்கிட்ட மட்டும் எதுக்கு நிறைய இடத்துல வாங்கினார்கள் என்று கேட்க அதனால தானே சொல்றேன் இது சூர்யா சாருக்கு தெரிஞ்சா அவங்க கிட்ட சண்டை போடுவாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் எப்படிமா இதை பண்ணிங்க என்று கேட்கிறார். உடனே அசோகன் எனக்கு ஒரு டவுட் இருக்கு முதல்ல நடக்க போறது கல்யாணமா விவாகரத்தா என்று கேட்கிறார். உன் தம்பி என்னமோ சாதிக்கிற போகிற மாதிரி இருந்தான் அதுக்குள்ள தான் நான் இப்படி பண்ணிட்ட இல்ல என்று சொல்ல அடுத்தது என்ன பண்ண போறீங்க என்று கேட்க அதுதான் நான் பண்ணிட்டேன்னு சொல்ற இல்ல முதல்ல அவன் என்ன பண்ண போறான்னு பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.
இப்படியே விட்டா நாளைக்கு அவள் கையெழுத்து போட்டுருவா என்று சொல்ல போடட்டும்.அவ போய் கையெழுத்து போட்டா இந்த வீட்டோட மருமகளா ஆயிட முடியுமா? நான் அதை நடக்க விட மாட்டேன் என்று சொல்ல, இந்த விஷயம் யாருக்கும் தெரியாம இருந்தால்தான் நல்லது என்ற மாதவி சொல்ல உன் புருஷன் சொல்லாம இருந்தா சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும் நடக்கக்கூடாது மா என்று சொல்ல அதை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு சூர்யாவும் அருணாச்சலமும் வீட்டுக்கு வர கல்யாணம் சாப்பாடு எடுத்து வைக்க அவர்களும் சாப்பிட உட்காருகின்றனர். நந்தினியும் சாப்பாடு பரிமாறி ஒரு வாய் எடுத்து வைக்கும் போது சூர்யா நம் வீட்டுக்கு யாராவது வந்தாங்களா என்று கேட்கிறார்.
யாரும் வரவில்லை என்று சொல்ல கல்யாணத்திடம் கேட்க அவரும் தயங்கி யாரும் வரவில்லை என்று சொல்லுகிறார். பிறகு சுந்தரவல்லி வந்து இன்னைக்கு எப்படி போச்சு என்று கேட்க எல்லாம் சிறப்பா முடிஞ்சது என்று அருணாச்சலம் சொல்லுகிறார் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இன்னைக்கு அட்வகேட் வர வச்சி இவங்களோட சம்பளத்தை கணக்கு காட்டுறதுக்காக கையெழுத்து கேட்ருந்தாங்க அதனால கல்யாணத்துக்கிட்டியும் இவகிட்டையும் கையெழுத்து வாங்கினேன் என்று சொல்ல அருணாச்சலம் கல்யாணத்துக்கிட்ட வாங்கின சரி நந்தினி கிட்ட எதுக்கு வாங்கின என்று கேட்க சூர்யா அதிர்ச்சி அடைகிறார். வேலைக்காரி தானே என்று சொல்ல அவங்க நந்தினி பத்தி தப்பா பேசக்கூடாது அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். இவளும் இந்த குடும்பமும் என்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கி இருக்காங்க இவ ஊரே போய் சொல்லும் கேளு என்று சொல்ல சூர்யா கோபப்படுகிறார்.இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சார் எதற்கு பயந்தாரோ அது நடந்துருச்சு என்று சொல்லுகிறார். நீ கையெழுத்து போட்ட பேப்பர் எப்படி இருந்தது என்று கேட்க நிலம் வாங்கும் போதெல்லாம் இருக்குமே அது மாதிரி ஒரு பத்திரம் என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண ஆஃபீஸ்க்கு வர இந்த கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லுகிறார் இவங்கதான் விவாகரத்து கேட்டிருக்காங்களே அப்புறம் எப்படி பண்ண முடியும் என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
