ஸ்கூலில் நடந்த விஷயம் , சூழ்ச்சியிலிருந்து வெளியேற போராடும் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் நந்தினி நீங்க இந்த அளவுக்கு என்ன புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி ஐயா என்று காலில் விழுந்து சொல்ல இப்ப இல்லம்மா எந்த காலத்திலும் நான் உன்ன சந்தேகப்பட மாட்டேன் இதை விற்றுமா என்று சொல்ல சூர்யா அந்த கேங் லீடருக்கு புரிஞ்சிடுச்சு அதுதான் உள்ள போயிட்டாங்க என்று சொல்லி சூர்யா நந்தினி அழைத்துச் சென்று விடுகிறார். ரூமுக்கு வந்த பிறகு நான் தான் எல்லா பிரச்சனையும் சரி பண்ணிட்ட இல்ல அப்புறம் எதுக்கு அழுவுற அன்னைக்கு மட்டும் நான் இருந்திருந்தேன்னா எல்லாரையும் கேட்டு இருப்பேன் அதுதான் டாடி சொல்லிட்டாருல்ல நீ அழுவாத நல்ல புள்ளையா எதை பத்தியும் யோசிக்காம போய் தூங்கு என்று சொல்ல, நந்தினி சூர்யாவிற்கு நன்றி சொல்கிறார். எதுக்கு என்று கேட்க இந்த வீட்டில எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பேசுவது ஐயா தான் ஆனால் திடீர்னு அவரும் அமைதியா போனதுனால நான் பயந்துட்டேன். நீங்க வந்து எல்லாத்தையும் ஒடச்சு பேசிட்டீங்க எனக்கு இப்பதான் ஆறுதலா இருக்கு என்று சொல்லி கையெடுத்து கும்பிடுகிறார்.
இதுக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட சண்டை போடும்போது உங்க பிரச்சனைக்கு என்ன எதுக்கு இழுக்கிறீங்கன்னு சண்டை போட்டு இருக்கேன் ஆனா இன்னைக்கு நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல இருந்து நான் கேட்டிருக்க வேண்டிய வார்த்தையா இருந்தது என்று சொல்ல, அப்போ என்ன பத்தி பாராட்டி நாலு வார்த்தை பேசு என்று சொல்ல கிண்டல் பண்றீங்களா என்று கேட்கிறார். அப்போ வழக்கம் போல திட்டு என்று சொல்ல அது இப்போ முடியாது சார் இன்னைக்கு நீங்க என்னோட சுயமரியாதையை காப்பாத்திருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்க கல்யாணம் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து வைக்கிறார்.
சூர்யா நந்தினி இடம் சாப்டியா என்று கேட்க கல்யாணம் பச்ச தண்ணி கூட பல்லுல படல நானும் சாப்பிடுன்னு சொல்லி சொல்லி எனக்கு வாயே வலிக்குது நீங்க சொல்லுங்க ஐயா என்று சொல்லுகிறார். ஓகே கல்யாணம் நான் பாத்துக்குறேன் என சொல்லி அவரை அனுப்பி விட்டு, ஏன் சாப்பிடல நந்தினி எதுக்கு சாப்பிடல என்று கேட்க பசிக்கல சார் என்று நந்தினி சொல்லுகிறார். பச்ச பொய் இவ்வளவு நேரம் எப்படி பசி இல்லாமல் இருக்கும் என்று சொல்லிவிட்டு நீ இப்பவே இங்கேயே சாப்பிடணும் எடுத்து சாப்பிடு என்று சொல்ல நீங்க சாப்பிடுங்க சார் நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்று சொல்கிறார். உன்னை எல்லாம் நம்ப முடியாது நீ இதை சாப்பிடு நான் இன்னொன்னு கல்யாணத்துக்கு எடுத்துக்கிட்டு வர சொல்றேன் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி பரவால்ல இருக்கட்டும் சார் என்று சொல்ல நீ இப்படி எல்லாம் சொன்னா கேட்க மாட்ட என்று சொல்லி இட்லி எடுத்து நந்தினிக்கு ஊட்ட போக நந்தினி கையில் கொடுக்க சொல்லுகிறார் சூர்யாவும் கையில் கொடுக்க நந்தினி சாப்பிடுகிறார். இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு நீங்க சாப்பிடுங்க என்று சொல்ல நான் ஆல்ரெடி புல்லா சாப்பிட்டுட்டேன் நீ எதுவும் சொல்லாமல் நல்ல பொண்ணா சமத்தா சாப்பிடு என்று சொல்லி கையில் கொடுக்க நந்தினியும் சாப்பிடுகிறார்.
மறுநாள் காலையில் நந்தினி அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க இன்னும் என் மேல கோவமா தான் இருக்கியாமா என்று கேட்க அப்படியெல்லாம் இல்லையா என்று சொல்ல, அந்த இடத்துல பேசியிருந்தால் வெறும் வார்த்தையோடு போயிருக்கும் அமைதியா போனதுனால நீ எந்தெந்த வார்த்தையோ கற்பனை பண்ணிக்கிட்ட நான் அப்படி பண்ணி இருக்க கூடாது, அது சூர்யா சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது நான் எந்த விதத்தில் உன்னை காயப்படுத்தியிருந்தாலும் மன்னிச்சிடு என்று கேட்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வந்து இவகிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கீங்க இவ்வளவு எதுக்கும் மதிக்கிறீங்க என்று கோபப்படுகிறார். உடனே அருணாச்சலம் நீ போமா என்று சொல்ல நான் பேச ஆரம்பிச்சுட்டா அவளை அனுப்பி விடுங்க ஏன்னா மனசு காயப்படும் இல்ல அதனால தானே என்று சொல்லிவிட்டு நேத்து நைட்டு அவன் என்னை அப்படி பேசினான் ஆனா நீங்க அவன்கிட்ட ஒரு வார்த்தை அம்மாவ அப்படி பேசாதன்னு நீங்க சொன்னீங்களா அவதா செக்க ஏமாத்தி பண்ணியிருக்கா ஆனா அவன் வந்ததுக்கப்புறம் அப்படியே பல்டி அடிச்சு இவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க அதுவும் இல்லாம அவகிட்ட போய் மன்னிப்பு கேக்குறீங்க என்று கோபப்படுகிறார் இதுக்கு மேல இந்த வீட்ல இருக்கக்கூடாது அவளை கண்காணாம இங்க இருந்து போக சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே நந்தினி விஜிக்கு போன் போட்டு கொஞ்சம் வெளியே போகணும் வரிங்களா என்று கேட்க எங்க போகணும் கேட்கிறார். ரஞ்சிதா சேர்த்த ஸ்கூலுக்கு போகணும் என்று சொல்ல, எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் என சொல்லி விட்டு இனிமே ரஞ்சிதா அந்த ஸ்கூல்ல படிக்க வேண்டாம் டிசி வாங்க தான் கூப்பிடுகிறேன் என்று சொல்லுகிறார். டிசி வாங்கறது எவ்வளவு பெரிய விஷயம் அசால்ட்டா சொல்லிக்கிட்டு இருக்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து நிற்கிறார்.
நான் யோசிக்காமல் சொல்ல மாட்டேன்ல வேற வழியே இல்ல வாங்கி தான் ஆகணும் என்று சொல்லுகிறார். அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று சொல்ல காலம் பூரா திருட்டு பட்ட வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் என்று சொல்லுகிறார். திருட்டு பட்டமா என்ன நந்தினி சொல்ற என்ற கேட்க நடந்த விஷயங்களை விஜியிடம் சொல்லுகிறார். இவ்வளவு நடந்து இருக்கா நான் வரேன் ஆனா டிசி வாங்கணும்னு மட்டும் யோசிச்சுக்கோ என்று சொல்ல இல்ல வாங்கியே ஆகணும் என்று சொல்லிவிட்டு போனை வைக்க இதையெல்லாம் சூர்யா கேட்டு விட்டு சென்று விடுகிறார். அனைவரும் சாப்பிட உட்கார எப்ப பாத்தாலும் எதுக்கு பொங்கல் செஞ்சுகிட்டு இருக்கீங்க என்று சொல்ல நந்தினி தான் எல்லாருக்கும் பிடிக்கும்னு செஞ்சாங்க என்று சொல்ல மாதவி சூர்யாக்கு பிடிக்கும் அப்பாவுக்கு பிடிக்கும் மத்தவங்களுக்கெல்லாம் பிடிக்க வேண்டாமா என்று சொல்ல சுந்தரவல்லி புடிக்கலனா இட்லி சாப்பிடு என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் கிச்சனில் கல்யாணம் நந்தினியை சாப்பிடச் சொல்ல இல்லன்ன ஸ்கூல் விஷயமா போய் டிசி வாங்கிட்டு வரப் போறேன் என்று சொல்ல அதற்கு மாதவி நீ என்னதான் டிசி வாங்கினாலும் அது எங்க வீட்டு பணம் என்று சொல்ல, நந்தினி எதுவும் பேசாமல் மேலே வர சூர்யாவும் எதிரில் வர இருவரும் மோதிக்கொள்ள நந்தினியின் முடி சூர்யாவின் பட்டனில் மாட்டி விட மெதுவா மெதுவா சார் என்று சொல்ல, இதைக் கேட்டுவிட்டு உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா எந்த இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா என்று கோபப்பட, சூர்யா இது தான் வாய்ப்பு என நம்ம போய் கீழே போய் எடுத்துக்கலாம் என்று அப்படியே அழைத்து வருகிறார்.
படிக்கட்டில் இருவரும் இறங்கி வருவதைப் பார்த்து இருப்பவர்கள் கடுப்பாக, சூரியா கல்யாணத்திடம் கத்தரிக்கோல் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி பட்டனை கட் பண்ண போக, அதெல்லாம் வேணாம் சார் இது ரொம்ப காஸ்ட்லியான டிரஸ் என்று சொல்ல, அதைவிட உன் முடி தான் அழகு நந்தினி, இவ்வளவு சாப்டா இவ்வளவு அழகா இவ்வளவு வாசனையா சத்தியமா ஒரு முடிய நான் பார்த்ததே இல்ல என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம உன் கிட்ட புடிச்சது இந்த முடி தான் இத போய் கட் பண்ண சொல்ற என்று கேட்கிறார். பரவால்ல முடிய கட் பண்ணுங்க என்று சொல்ல சூர்யா என் தலையை கூட கட் பண்ணுவ ஆனா முடிய கட் பண்ண மாட்டேன் அது உன் அழகுக்கு நான் பண்ற துரோகம் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி கோபமாக சேரை தள்ளிவிட்டு சென்று விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில்நந்தினி மீது திருட்டுப்பழி விழ ரஞ்சிதா உடன் ஸ்கூலுக்கு சென்று டிசியை கொடுக்குமாறு பணம் கட்டிய இரண்டு லட்சத்தை கேட்கிறார் பணமும் கிடையாது டீசி கிடையாது என சொல்லிவிடுகின்றனர்.
பிறகு நந்தினி பணத்தை எப்படி ஏற்பாடு செய்கிறார்? என்ன நடக்கப் போகிறது? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

