நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியல் இன்னும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு சூர்யா மருந்து போட்டுக் கொண்டிருக்க அருணாச்சலம் என்னஆச்சு என்று விசாரிக்கிறார். நடந்த விஷயங்களை நந்தினி சொல்ல அருணாச்சலம் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணியா என்று கேட்க நம்மளே கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லியும் கேட்காமல் அருணாச்சலம் போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லுகிறார். சூர்யா நந்தினியிடம் உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா என்று கேட்க ஊர்லையாவது சுதாகர் இருக்கான் இந்த ஊர்ல எனக்கு எதிரி யார் இருக்காங்க என்று சொல்ல, இது உனக்கானது அல்ல இந்த குடும்பத்துக்கான தான் இருக்கும் சரி நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி ஓய்வெடுக்க சொல்லுகிறார்.
மறுபக்கம் மினிஸ்டர் கட்சிக்காரர் ஒருவர் தலைவரை பார்க்க வேண்டும் என்று வர வாட்ச்மேன் அவரை உள்ளே விடாமல் இருக்கிறார். முக்கியமான விஷயம் என்று சொல்ல, அதுக்குன்னு ரெண்டு மணிக்கு வருவீங்களா என்று வாட்ச்மேன் கேட்க, உடனே போன் போட்டு பேச வேண்டும் என்று சொல்ல, நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லுகிறார். இல்ல முக்கியமான விஷயம் இப்பவே பேசணும் உங்க வீட்டு வாசலில் தான் இருக்கிறேன் என்று சொல்ல சரி உள்ளே வா என்று சொல்லுகிறார். உடனே கட்சி விஷயம் குறித்து மினிஸ்டரிடம் பேசுகிறார். அதில் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என்ற தகவல் இருக்கிறது. உடனே மினிஸ்டர் டென்ஷன் ஆக அர்ச்சனா இப்ப எதுக்குப்பா கோபப்படுறீங்க எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் என்று சொல்லி கட்சிக்காரர்களை அனுப்பிவிட்டு அர்ச்சனா மினிஸ்டரை அழைத்துச் செல்கிறார்.
எனக்கு டென்ஷனா இருக்கு அர்ச்சனா எனக்கு அமைச்சர் பதவி இல்லனா கூட பரவால்ல ஆனா நான் சாகும்போது மாவட்டச் செயலாளராக சாகனும் என்று சொல்லுகிறார். நீங்க எப்பவுமே எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணுவீங்களே ஒருத்தவங்கள அடிக்கணும்னா அவங்கள தப்பா நினைக்க வச்சே அவங்கள என்ன வேணா பண்ணுங்க என்று சொல்ல அர்ச்சனாவின் அம்மா இவ என்ன அவருக்கே அரசியல் கற்றுக் கொடுக்கிறா எங்க போய் முடியப் போகுதோ தெரியல என்று யோசித்து விட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க, அவர் நந்தினி இடம் கொஞ்ச நாளா நம்ம வீட்ல பிரச்சனை வந்துகிட்டே இருக்கு நான் விஜி கிட்ட சொல்றேன் நீயும் சூர்யாவும் என ஆரம்பிக்க தயவு செஞ்சு ரெசார்ட் மாறி எங்கேயும் அனுப்பிடாதீங்க இதுக்கு மேல என்னால பிரச்சனை தாங்க முடியாது என்று சொல்ல இல்லமா கோயிலுக்கு போயிட்டு வாங்க என்று சொல்ல சரி நானும் விஜி அக்காவும் போறோம் என்று சொல்லுகிறார் இல்ல நீயும் சூர்யாவும் போங்க என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சூர்யா கவனித்து எங்க போனோம் என்று கேட்க இரண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கோவிலில் பூக்கடையில் மூன்று ரவுடிகள் தேங்காயை உடைத்து நல்ல தேங்காயா இல்லையா என்று பாக்கணும் என்று சொல்லி பூக்கடை பெண்ணிடம் வம்பு இழுக்கிறார். அர்ச்சனா சுந்தரவல்லி வீட்டுக்கு வர அருணாச்சலம் இவ எதுக்கு அடிக்கடி வரா என்று நினைக்கிறார்.
அருணாச்சலத்திடம் அர்ச்சனா வர என்ன விஷயமா என்று கேட்கிறார் இல்லை இங்க தெரிஞ்ச இடத்துக்கு வந்த அப்படியே ஆன்ட்டியை சூர்யாவும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்ல சூர்யா இல்ல காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருக்கான் என்று சொல்ல நந்தினி இருக்காளா என்று கேட்க நந்தினி இல்ல ரெண்டு பேரும் தான் போயிருக்காங்க என்று சொன்னதைக் கேள்விப்பட்டவுடன் சரி நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சூர்யாவும், நந்தினியும் கோவிலுக்கு வந்து இறங்க, நந்தினி நான் போய் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன் சார் என்று சொல்லி வர அங்கு பூக்கடையில் தேங்காயில் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நபர்களை பார்த்து அது நல்ல தேங்காய் தான் எனக்கு தெரியும் என்று சொல்ல அது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கிறார். எனக்கு தென்னந்தோப்பு பற்றியும் ,தேங்காய் பத்தியும் நல்லாவே தெரியும் என்று சொல்ல அவர்கள் நந்தினியிடம் வம்பு இழுக்க சூர்யா அவர்களை அடி வெளுத்து வாங்குகிறார். அந்த நேரம் பார்த்து வந்த அர்ச்சனா காரில் இருந்து இறங்கி கோபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கோவிலுக்கு வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று இல்லாமல் என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று ஒருத்தனை அடித்துக் கொண்டே நந்தினியை கூப்பிட்டு என்ன சொன்னான்னு என கேட்கிறார் ஒன்னும் சொல்லல சார் என்று சொல்ல இல்ல எதையோ சொன்னானே என்று கேட்க நந்தினி தென்னந்தோப்பு என ஆரம்பிக்க உடனே சூர்யா அவனை அடித்துக்கொண்டே தென்னந்தோப்புன்னு சொல்லுவியா மன்னிப்பு கேளுடா என்று நந்தினிவிடம் மன்னிப்பு கேட்க வைக்க அர்ச்சனா அவளுக்காக இப்படி ரோட்ல இறங்கி சண்டை போட்டுக்கிட்டு இருக்கான் என கோபப்படுகிறார் பிறகு சூர்யா அவர்களை துரத்தி விட்டு விட்டு நீ ஓகே தானே நந்தினி என்று சொல்ல நந்தினி பூக்கடையில் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார். நந்தினி எதுக்கு சார் இப்படி பண்றீங்க என்று கேட்க சட்டை எல்லாம் மண்ணாயிடுச்சு என்று சட்டையிலிருந்து மண்ணை தட்டி விட அர்ச்சனா எல்லாருக்கும் முன்னாடி கோயில ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா என்று கோபப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவின் காலை நீவி விட அர்ச்சனா பக்கத்தில் இருக்கிறார். சூர்யாவிடம் அவங்க என்னோட உயிரை காப்பாத்தணவங்க சார் என்று சொல்ல ஆனா கடத்தினவங்க யாருன்னு தெரியலையே என்று சூர்யா சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் வர அவர்கள் நந்தினியை பார்த்து உனக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கு அந்த வகையில் ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல நந்தினி அவர்களிடம் சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டிருக்கிறார் இதனால் சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
