கொண்டாட்டத்துக்கு தயாரா மாமே..இன்று வெளியாகும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர்..!
குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் திரிஷா, சுனில் ,அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மட்டும் ஃபர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கிள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், தற்போது இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
https://x.com/MythriOfficial/status/1908032976002363836