சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, அருணாச்சலம் விட்டு சவால்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவியும் சுரேகாவும் பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு என்று கூப்பிடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க, அருணாச்சலம் நந்தினிக்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷயம் பற்றி சொல்லுகிறார். நந்தினி கழுத்துல இருக்குற தாலி அறுந்து விழற மாதிரி இருக்கு வழக்கமா நம்ம வீட்டு பொம்பளைங்க தான் இதை பண்ணி இருக்கணும் ஆனா கல்யாணம் வந்து சொன்னான். ஆனால் நந்தினி கிட்ட பேசினா அவ மறுக்கிறா என்று சொல்ல அதற்கு சுரேகா இப்ப எங்களை போய் சமாதானப்படுத்த சொல்றீங்களா என்று கேட்கிறார்.
அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே சமாதானப்படுத்திட்டேன் என்று சொல்ல,உடனே மாதவி இப்போ இந்த வீட்ல நந்தினிக்கு தாலி பிரிச்சு கோர்க்குற பங்க்ஷன் நடத்தணும் அதுதானே என்று கேட்க ஆமாம் என்று அருணாச்சலம் சொல்ல, அதுக்கு அம்மா பிரச்சனை பண்ணுவாங்கன்னு தெரியும் இல்ல என்று சொல்லி எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நம்ப ஜுவல்லரி ஷாப் போயிட்டு தாலி வாங்கிட்டு வந்துடுவோம் கிளம்புங்க என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் சென்று விடுகிறார். சுரேகா விட்ட அடுத்த சீமந்தம் பண்ணிடுவாங்க என்று சொல்ல, நீ எதுக்கு டென்ஷன் ஆகுற, அவை இந்த வீட்ல இருக்கணும்னு அதுக்கு இதுவும் சரியான ஐடியா தான் என்று முடிவு எடுக்கின்றனர்.
சூர்யா நந்தினி இடம் நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் நீ பதில் சொல்லு என்று கேட்க சொல்லுங்க என்று சொல்ல, நீ சின்ன வயசுல இருந்து கிராமத்துல இருந்த ஆனா இவ்வளவு நாளா சென்னையில இருக்கே இங்க உனக்கு எது செட் ஆகல என்று கேட்கிறார். செட் ஆகலனா எல்லாம் செட் ஆகல. டீக்கடையில் ஆரம்பித்து காசு செலவு செய்யும் வரை கிராமத்துக்கும், சிட்டிக்கும் இருக்கிற வித்தியாசத்தை நந்தினி லிஸ்ட் போட்டு சொல்ல சூப்பர் என்று சொல்லுகிறார் சூர்யா. அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வர தாலிப் பிரித்துக் கோர்க்கும் பங்ஷனுக்கு தாலி வாங்கணும் நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க என்று சொல்ல நந்தினி நான் வரல ஐயா நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லுகிறார்.சைஸ்லாம் பார்த்து வாங்கணுமா நீ வந்தா தான் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்ல சரி போயிட்டு வா நந்தினி என்று சூர்யா சொல்லுகிறார் உடனே அருணாச்சலம் நீயும்தான் வரணும் என்று சொல்லுகிறார். சூர்யா நா எதுக்கு டாடி என்று கேட்கிறார். தாலி செயின் போடப்போறது நந்தினி நான் எதுக்கு வரணும் என்று கேட்க தாலி செயின் போடப்போறது நந்தினி தான் ஆனால் போட்டுவிட போறது நீதானே என்று சொல்லுகிறார். பிறகு ரெண்டு பேரும் ரெடி ஆயிருங்க கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
வெளியில் வந்த அருணாச்சலம் சிங்காரத்திற்கு போன் போட்டு, நந்தினிக்கு நடக்கப் போகும் பங்ஷனுக்கு நீங்களும் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னு தான் நான் நினைக்கிறேன் ஆனால் நந்தினி வேற நினைக்கிறா. அன்னைக்கு நீங்க தீபாவளிக்கு வந்து அசிங்கப்பட்டதுனால யாருக்கோ கூப்பிட வேணாம் தகவல் சொல்ல வேண்டாம் அவங்களை அசிங்கப்படுத்த நான் விரும்பல என்று சொல்லி கண்டிஷன் போட்டு இருக்கா என்று சொல்ல சிங்காரம் கண் கலங்கி கொண்டு அப்ப நாங்க யாரும் வர வேணாமயா என்று அழுகிறார். உன் சூழ்நிலை எனக்கு புரியுது சிங்காரம் இந்த ஃபங்ஷன்ல நான் சூர்யாவோட அப்பாவா இருக்கிறதோட நந்தினி ஓட அப்பாவா இருந்து நல்லபடியா பண்ற என்று சொல்லி பிறகு போன் பண்ணுவதாக சொல்லி போனை வைக்கிறார்.
நந்தினி துணியை காய வைத்துக் கொண்டிருக்க அருணாச்சலம் மாதவி என அனைவரும் வந்து இன்னும் நீ ரெடியாகலையாமா என்று கேட்க, நான் எதுக்கயா நீங்களே எது வந்தாலும் பார்த்து எடுத்துட்டு வாங்க என்று சொல்ல அருணாச்சலம் மற்றும் மாதவி வர சொல்லி வற்புறுத்தி கூட்டி செல்கின்றனர். சூர்யா காரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் ரெடியாகி வெளியே வந்து நிற்க சுந்தரவல்லி காரில் இருந்து இறங்கி எதிரில் வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் பதற்றப்பட நீங்க எதுவும் பேசாதீங்க நான் பேசுகிறேன் வாங்க என்று கூட்டி வருகிறார் உடனே திரும்பவும் வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் கிளம்பி போயிட்டீங்க போல, என்ன தவிர என்று சொல்லிவிட்டு எங்க போறீங்க என்று கேட்கிறார். உடனே சுரேகா சூர்யாவோட ஃப்ரெண்ட் பார்ட்டிக்கு போறோம் சூர்யா அங்க குடிச்சிட்டு விழுந்தா என்ன பண்றது அதனாலதான் நாங்க எல்லாரும் கூட போறோம் என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி யோசிக்கும்போது சூர்யா காரிலிருந்து ஹாரன் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
உடனே சுந்தரவல்லி ஹாரன் சத்தம் கேட்டு கடுப்பாகி எங்கேயோ போய் தொலைங்க என்று சொல்லி உள்ளே சென்று விடுகிறார். பிறகு அனைவரும் காரில் ஏறி கிளம்புகின்றனர். சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க உடனே அவரது தோழி போன் பண்ணி தெரிஞ்சவங்களோட சீமந்த பக்ஷனுக்கு நம்ம என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று கேட்க, இதுல என்ன யோசிப்பதற்கு வெள்ளி, இல்ல தங்கம் கொடுக்க வேண்டியதுதான் என்று சொல்ல நானும் அதே தான் யோசிச்சேன் எந்த கடைக்கு போகலாம் என்று கேட்க வழக்கம் போல போற கடைக்கு போயிடலாம் என்று சொல்ல நானும் அந்த கடையிலேயே தான் இருக்கேன் நீ கிளம்பி வா என்று சொல்லுகிறார். சூர்யா அருணாச்சலத்திடம் எந்த கடைக்கு போகணும் டாடி என்று கேட்க நம்ப வழக்கமா போற கடைக்கு தான் என்று சொல்லுகிறார். இருவரும் ஒரே கடையை சொல்லுகின்றனர்.
இவர்கள் காரில் ஜாலியாக பேசிக்கொண்டு போக அருணாச்சலம் மாதவியிடம் உன்னோட தாலி பிரிச்சி கோர்க்கிற பங்க்ஷன்ல என்னமா நடந்தது எனக்கு ஞாபகம் இல்லை என்று கேட்க, நீங்க இருந்தா தானப்பா ஞாபகம் இருக்கும் நீங்க தான் அந்த டைம் வெளியே போயிட்டீங்களே ஞாபகம் இல்லை என்று சொல்லிட்டு அப்படியா என்று கேட்கிறார். உடனே அசோகன் ஆயிரம் தான் இருந்தாலும் உங்களுக்கு சூர்யா மேல தானே பாசம் ஃபர்ஸ்ட் என்று சொல்ல அருணாச்சலம் சூர்யா என இருவரும் சிரிக்கின்றனர். பிறகு அனைவரும் நகை கடைக்கு வந்து இறங்குகின்றன. கடைக்குள் வந்தவுடன் நந்தினியிடம் அருணாச்சலம் உனக்கு என்ன பிடிக்குதோ நீ அதை எடுத்துக்கோ கம்மியா எல்லாம் வாங்காத காசுல்லா பாக்காத என்று சொல்ல விஜி அக்கா வந்தவுடன் எடுத்துக்கலாமா ஐயா என்று சொல்ல விஜி வரமாட்டேன்னு சொல்லிட்டா ஏதோ அவ சொந்தக்காரருக்கு உடம்பு சரியில்லையா என்று சொல்லிக் கொண்டிருக்க சுந்தரவள்ளியும் அதே கடைக்கு வந்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி நாலு செயின் எடுத்து வச்சிருக்கோம் அதுல எதுனு முடிவு பண்ணல என்ற மாதவி சொல்ல ஏதுன்னு பார்த்து எடுக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.
கட்டாயம் இந்த தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்கும் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று சுந்தரவல்லி இடம் அருணாச்சலம் சொல்லுகிறார் ரூமில் சுந்தரவல்லி கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்க மாதவியிடம் இந்த தாலி அவ கழுத்துல ஏறக்கூடாது என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.