Pushpa 2

கண்டிஷன் போட்ட விஜயா அதிர்ச்சியான ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு விஜயா கண்டிஷன் போட்டுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-01-24
SiragadikkaAasai Serial Today Episode Update 04-01-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி மற்றும் மனோஜை மன்னிக்க ஜட்ஜம்மா ஒரு தீர்ப்பு மட்டும் தப்பா சொல்லிட்டாங்க என்று விஜயாவை மட்டும் சொல்லுகிறார். என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க, நீ ஒன்னும் உன் மாமனார் கொடுத்த பணத்துல ஷோரூம் ஆரம்பிக்கல அப்பாவோட பணதில தான் ஆரம்பிச்சிருக்க அப்போ அந்த கடைக்கு நீ எப்படி ஓனரா இருக்க முடியும் என்று கேட்கிறார். அதற்கு விஜயா இப்ப என்ன உனக்கு அதுல காசுல பங்கு வேணுமா என்று கேட்க எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்று முத்து சொல்லுகிறார். உடனே ரவி இடம் கேட்க ரவியும் வேண்டாம் என சொல்ல பல குரல் கிட்ட கேட்டு முடிவு எடுத்து சொல்லு என்று சொல்லுகிறார் அதற்கு சுருதியம் எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார்.

உடனே மனோஜிடம் ஓனரை மாற்ற வேண்டும் என்று சொல்ல அப்போ நீ ஓனராக போறியா என்று கேட்க நான் தான் ஏற்கனவே ரெண்டு காருக்கு ஓனரா இருக்கேனே என்று சொல்லுகிறார். இந்த ஷோரூம்க்கு அப்பா தான் ஓனர் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றன. அண்ணாமலை இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல இப்படி பண்ணாதம்பா கரெக்டா இருக்கும் என்று ரவியும் சொல்லுகிறார். விஜயாவும் அமைதியாக இருக்க அம்மாவே அமைதியா இருக்காங்க அப்ப நான் சொல்றது கரெக்ட் தானே என்று முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் ரூமில் கோபமாக ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வர ரோகினியிடம் பேசுகிறார். ஆனால் ரோகினி கோபமாக மனோஜிடம் உங்க அம்மா என்ன அவ்வளவு தூரம் அடிக்கும்போது திட்டும்போது ஒரு வார்த்தை சொன்னியா இல்ல அடிக்காத நான் சொன்னியா உனக்காக தானே இவ்வளவும் பண்ண அந்த காசில எனக்காக எதனா பண்ணிக்கிட்டனா ஒரு போன் பண்றது கூட உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு தான் பண்ற, தயவு செஞ்சு என்கிட்ட பேசாத மனோஜ் என்று கோபப்படுகிறார். அதற்கு மனோஜ் நீ மட்டும் என்னால எதுவும் பண்ணிருக்க முடியாது என்று சொன்ன என்று சொல்ல உனக்கு அது தான் தப்பா ஆயிடுச்சு இல்ல அதுல தான் உண்மை இருக்கு வேற என்ன உண்மை, நான் இல்லனா உன்னால எதுவுமே பண்ண முடியாது நான் சொன்னதுனால தானே உன்னால ஷோரூம் இருந்த இப்போ அந்த முத்து உன்ன ஓனர் பதவியிலிருந்து இறக்கிட்டா அப்புறம் வேலைக்காரன் ஆக்குவா அந்த மீனா எப்படி கைத்தட்டி சிரிச்சா பத்தியா இதுதான் இந்த வீட்ல உன்னோட நிலைமை என்று சொல்லிவிட்டு என்கிட்ட பேசவே பேசாத என்று கோபம் அடைகிறார்.

மறுபக்கம் முத்து,மீனா மொட்டை மாடியில் குச்சி எடுத்துக்கொண்டு முத்துவை மிரட்டி விரட்டி அடிக்க அவர் வேணா ரோகினி வேணா ரோகினி என்று சொல்லுகிறார் அதற்கு மீனா ஏன் மனோஜ் இப்படி பண்ண உங்க அம்மா அடிக்கும்போது வேடிக்கை பார்த்துவிட்டு நிற்பாயா உங்க அம்மா பேச வேணாம்னு சொன்னா பேச மாட்டியா என்று அவர்களைப் போல் மாறி மாறி பேசிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால முடியல போதும் என்று சொல்ல ஒருத்தர மாதிரி நடிக்கும் போது முழுசா நடிக்கணும் என்று சொன்னார் இது மாதிரி அவங்க நடந்திருக்கும் என்று கேட்கிறார். கண்டிப்பா அப்படித்தான் நடந்திருக்கும்.

பார்லரம்மா மனோஜ்கிட்ட இப்படி தான் கேள்வி கேட்டு செம அடி விழுந்திருக்கும். மனோஜ் வீட்டுக்கு வாரத்துக்கு அம்மா தான் காரணம் என்று தெரிந்து கொள்ள சண்டையாகியிருக்கும் என்று பேசிக்கொள்கின்றனர்.

அதன் பிறகு அப்பாவை ஓனராக்கணும்னு சொல்லும்போது நீ ரொம்ப சந்தோஷப்பட்டு கைதட்டின அப்போ உனக்கு இதுல விருப்பமா என்று கேட்க ஆமாங்க நான் வர நேரத்துக்கு என்ன பண்ணனும் தெரியாம என்னை அறியாம பண்ணிட்ட என்று சொல்ல அதுல என்ன இருக்கு உனக்கு சந்தோஷம் தானே என்று சொல்ல எனக்கு எப்படி சந்தோஷம் இல்லாம இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே முத்து நல்லவங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் ஆனா அந்த பார்லர் அம்மாவுக்கு இன்னும் எங்க அம்மா கையால நிறைய அடி விழும் நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். இது மட்டும் பண்ணிருக்கணும்னு தோணல இன்னும் நிறைய தப்பு பண்ணி இருக்கோம் தோணுது இதுக்கு அப்புறம் தான் ஒன்னு ஒன்னா வெளியே வரும் என்று சொல்ல எப்படி சொல்றீங்க என்று மீனா கேட்கிறார். எப்பவுமே ஒரு தப்பு பண்ணி மாட்டினவங்க பதற்றத்திலேயே அடுத்தடுத்து மாட்டிப்பாங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ரூமில் ரோகினி வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் எங்க மங்கும் நடந்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து விஜயா வந்து உட்கார்ந்து உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சொல்லுகிறார். ரோகினி இடம் நீங்க பண்ணதுனால இப்ப எவ்வளவு பெரிய அசிங்கம் ஆயிடுச்சுன்னு பார்த்தீங்களா என்கிட்ட சொல்லி இருந்தா நான் அதை மறைத்து இருப்ப இல்ல என்று சொல்லி கேட்கிறார் உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லல ஆன்ட்டி நேரம் வரும்போது சொல்லலைன்னு தான் இருந்தோம் என்று ரோகினி சொல்லுகிறார்.

உடனே விஜயா சரி போனதெல்லாம் போகட்டும் அந்த 27 லட்சத்துக்கு தான் அந்த முத்து இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கான் அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டீங்கன்னா பிரச்சனைக்கே வரமாட்டான் நீ உங்க அப்பா கிட்ட சொல்லி 27 லட்சம் ரெடி பண்ணி அனுப்ப சொன்னேன் என்று சொன்ன ரோகினி அதிர்ச்சி அடைகிறார். சொல்லிவிட்டு விஜயா கிளம்ப போக அவர்தான் ஜெயில்ல இருக்காரு ஆன்ட்டி என்று ஆரம்பிக்க ஜெயில்ல இருந்தா என்ன சொத்துவெளியே தானே இருக்கு அனுப்ப சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இதனால் ரோகிணி என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.

மறுநாள் காலையில் முத்து அண்ணாமலையை கடை ஓனர் ஆக்க பேச அவர் சம்மதிக்கிறாரா? இல்லையா? விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-01-24
SiragadikkaAasai Serial Today Episode Update 04-01-24