சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினியை தூக்கிச் சென்ற சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ரெசார்ட்டுக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க, அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் அவ இந்த வீட்டோட மகாராணி அவள கேள்வி கேட்க யாராவது இருக்கீங்களா என்ன என்று கேட்கிறார்.
மறுபக்கம் சூர்யா நந்தினியை தூக்கிக் கொண்டு ரூமுக்குச் செல்ல, அங்கே போன் அடிக்க நந்தினி அதை எடுக்க முயற்சி செய்ய முடியாததால் சூர்யா எடுத்துக் கொடுக்கிறார். அவர் எடுத்துக் கொடுக்கும்போது சூர்யாவை செயின் நந்தினி தாலிக் கயிற்றில் சிக்கிக் கொள்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
