
பிக் பாஸ் போன பெரிய ஆளாலெல்லாம் ஆக முடியாது, விஜய் வர்மா அதிர்ச்சி தகவல்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் விஜய் வர்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எட்டாவது சீசனின் வெற்றியாளராக டைட்டிலை தூக்கியவர் முத்துக்குமரன் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜய் வர்மா. பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல போட்டிகள் பல்வேறு கனவுடன் உள்ளே வருகின்றனர். அதில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு பங்கேற்றவர் விஜய் வர்மா.
தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெரிய ஆள் எல்லாம் ஆக முடியாது என்று பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சினிமா தான் என் வாழ்க்கை என்கிற முடிவோடு இந்த துறைக்கு வந்தேன் இன்னும் 30 வருடமானாலும் நான் சினிமாவில் தான் இருப்பேன் எனக்கு இது மட்டும் தான் தெரியும். இத்தனை வருஷம் வீணா போச்சே என்று வருத்தப்பட மாட்டேன் வருத்தப்பட்டால் என் கேரியரே வீணாப் போயிடும்.
பிக் பாஸ் வீட்டுக்கு சென்றால் மட்டும் வாய்ப்புகள் வராது நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போய் வந்து விட்டேன். நான் ஹீரோவாகி விடுவேன் என்பதெல்லாம் நடக்காது ஜீரோவாக தான் முடியும் அப்படியெல்லாம் நினைத்து விடாதீர்கள் பிக் பாஸ் உள்ள போயிட்டு வந்தா நீங்க யார் என்று இந்த ஊருக்கு தெரியும் அவ்வளவுதான் அது ஒரு ரியாலிட்டி ஷோ அவ்வளவுதான் அப்படியே ஹீரோ ஆனாலும் ஒரு படம் நடிப்பீங்க அந்த படத்துல சிக்சர் அடிச்சு ஆக வேண்டும் அப்படி இல்லன்னா உங்களை முடித்து விட்டு விடுவாங்க என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
