டெல்லி வீட்டில் சிக்கிய நந்தினி, பணத்துடன் வந்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் காரில் வர நந்தினி இடம் நீ அவள கண்மூடித்தனமா நம்பிகிட்டு இருக்காத நீ ஒருத்தவங்கள நம்பனா அவங்க மேல ஏன் உனக்கு சந்தேகமே வர மாட்டேங்குது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, அவங்களெல்லாம் சரி பார்சல் வாங்கிட்டு போறாங்க என்று சொல்லுகிறார் அதற்கு சூர்யா அவ எவ்வளவு பெரிய ஃபிராடுன்னு உனக்கு தெரியாது அவ மேல சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவை என்ன வேணாலும் பண்ணுவா என்று சொல்ல இப்ப அட்மிட் பண்ணி இருக்காங்கன்னு சொல்லி இருக்காங்க அதுக்கு என்ன சார் சொல்ல போறீங்க என்று சொல்ல இப்ப அதுக்காக தானே நேரில் போய் பார்க்கிறோம் அங்க போனா எல்லாம் உண்மையும் தெரியும் என்று சொல்லுகிறார் உடனே நந்தினி நீங்க என்ன சொல்றீங்க ஆனா அர்ச்சனா அப்படின்னாவே தப்பானதால நீங்க எப்படி முடிவு பண்றீங்க என்று சொல்ல அந்த விஷப்பூச்சிக்காக நீ என்கிட்ட லாஜிக்கா பேசிக்கிட்டு இருக்கியா என்று கேட்கிறார்.
பிறகு இருவரும் ஹாஸ்பிடலுக்கு வர சூர்யா ரிசப்ஷனில் விசாரிக்க அவர்கள் அர்ச்சனா இருக்கும் ரூம் சொல்லுகின்றனர் பிறகு உள்ளே சென்றவுடன் அர்ச்சனா டிரிப்ஸ் போட்டு தூங்கிக் கொண்டிருப்பது போல் படுத்துக் கொண்டிருக்க, சூர்யா வந்தவுடன்vவிஜி வீட்ல இருந்த மாவில் என்னத்த கலந்த உண்மையை சொல்லிடு நீ எவ்வளவு பெரிய பிராடு என்று எனக்கு தெரியும் இப்ப கூட நீ நடிச்சுகிட்டு தான் இருக்கணும் எனக்கு தெரியும் ஒழுங்கா உண்மைய சொல்லிடு என்று கேட்டுக்கொண்டே இருக்க நந்தினி கொஞ்சம் பொறுமையா பேசுங்க சார் என்று சொன்னால் என்ன பொறுமையா பேச சொல்ற என்று கத்திக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து டாக்டரும் நர்சும் வந்து விடுகின்றனர் எதுக்கு சார் இப்படி வந்து பேசிட்டு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க இவ சும்மா காசு கொடுத்துதான் நீங்க வந்து படுத்து கிடக்கா என்று சொல்ல யாராவது அப்படி பண்ணுவாங்களா சார் அவங்களுக்கு நிஜமாகவே இடியாப்பம் சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆயிருக்கு பிளட் டெஸ்ட் பண்ணி கண்டுபிடிச்சிருக்கோம் என்று சொல்லுகிறார்.
எனக்கு இதுல டவுட் இருக்கு என்று டாக்டரிடம் பேச வர தயவுசெய்து வெளிய போங்க சார் டிஸ்டர்ப் பண்ணாதீங்க எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக்கோங்க என்று சொன்ன நந்தினி அவரை அழைத்துச் சென்று விடுகிறார். வெளியில் வந்த பிறகு பார்த்தீர்களா இதுக்கு என்ன சொல்ல போறீங்க அவங்களும் அந்த இடியாப்பம் சாப்பிட்டு தான் இப்போ இப்படி இருக்காங்க என்று சொல்ல அத நீங்க ஏன் நம்ப மாட்டீங்க நந்தினி இப்பவே அவள் மனசு சொல்லுது இவதான் இந்த விஷயத்துல சம்பந்தப்பட்டிருக்கா எப்பவுமே என் மனசு சொல்றது பொய்யாகாது நீ ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றுவிட அர்ச்சனாவின் தோழி நீ எவ்வளவு கிரிமினலா யோசிச்சு இருக்க ஏற்கனவே நீ விரலை ஒடச்ச அப்பவே நான் யோசிச்சு இருக்கணும் அதுவுமில்லாம பத்து ரூபாய் இடியாப்பத்துக்காக நீ 10 கிலோமீட்டர் தாண்டி வந்து இருக்கேன்னு சொன்னப்பவே யோசிக்கணும் என்ன பாத்தா உனக்கு பாவமாவே தெரியலையாடி என்று கேட்க தெரிஞ்சது என்று சொல்லுகிறார் எப்போ என்று கேட்க நீ டேஸ்டா இருக்கு இன்னும் கொஞ்சம் கொடு என்று சொன்னாயே அப்போதான் என்று சொல்லுகிறார்.ஒருவேளை செத்துப் போயிருந்தா என்னடி பண்ணி இருப்ப என்று கேட்க அப்படி எல்லாம் விட்டு இருக்க மாட்டேன் என சொல்லுகிறார்.
நீயா என்னோட டெத்த வச்சு இன்னும் அதுல என்ன பிரச்சனை பண்ணாலும் யோசிப்ப என்று சொல்ல நானும் தானடி சாப்பிட்டேன் என்று சொன்ன நீ ஒரே ஒரு சின்ன பீஸ் சாப்பிட்டேன் அதுவும் உன் மேல சந்தேகம் வந்துட கூடாதுன்னு சாப்பிட்டேன் நான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு அருணாச்சலம் வீட்டில் காத்திருக்க நந்தினி சூர்யா வந்தவுடன் என்ன ஆச்சு அர்ச்சனாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா என்று கேட்க நந்தினி அவங்களும் இந்த இடியாப்பத்தை சாப்பிட்டு ஹாஸ்பிடல் மயக்கமா தான் இருக்காங்க என்று சொல்ல அருணாச்சலம் சூர்யா அந்த பொண்ணு தான் காரணமா இருக்கும்னு சொன்னா என்று கேட்கிறார். இல்லைங்க ஐயா என்னால தாங்க முடியல எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்கு என்று சொல்ல சூர்யாவிடம் அருணாச்சலம் நீ என்னடா அமைதியாவே இருக்க என்று சொல்ல யாருமே என்னை புரிஞ்சுக்கல என் உள் மனச இப்பயும் சொல்லுது இந்த பிரச்சனைக்கும் அர்ச்சனாவுக்கும் சம்பந்தம் இருக்குனு என்று சொல்லிவிட்டு செல்கிறார். மறுபக்கம் விஜி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க விவேக் என்னாச்சு விஜி அதையே நினைச்சுகிட்டு இருக்கியா என்று கேட்க யாருக்காவது ஏதாவது பயமா இருக்கு என்று சொல்ல அப்படி எல்லாம் இருந்தா அவங்க சும்மா விட்டு இருக்க மாட்டாங்க வெறும் வாந்தி மயக்கம் மட்டும் தான் இருக்கும் விடு என்று சொல்லிக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து டெல்லி ஆட்கள் வந்து விஜியும் நந்தினியையும் டெல்லி அண்ணன் வர சொன்னதாக கூப்பிடுகின்றனர் சரி வந்து விட்டோம் என சொல்ல அவர்கள் சென்று விடுகின்றனர் உடனே நந்தினிக்கு விஜி போன் போட்டு டெல்லி வீட்டுக்கு வர சொல்ல விஷயத்தை சொல்ல நம்ம தான் வட்டி கொடுத்துட்டு மெக்கா என்று சொல்ல ஒருவேளை இந்த விஷயம் தெரிஞ்சு கூப்பிடுகிறார் என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு சரி போகலாம் என முடிவெடுக்கின்றனர்.
பிறகு டெல்லி வீட்டுக்கு இருவரும் வர நாங்க தான் வட்டி கொடுத்துட்டோமே எதுக்கு வர சொன்னிங்க என்று நந்தினி கேட்கிறார் வட்டி எல்லாம் கொடுத்துட்டீங்க ஆனால் நடந்த விஷயத்தை நானும் கேள்விப்பட்டேன் நீங்க இட்லி இடியாப்பம் சுட்டுக் கொடுத்த கடையை இப்ப சீல் வச்சுட்டாங்க இதுக்கு அப்புறம் உங்ககிட்ட யாரும் வாங்க மாட்டாங்க நீ அடுத்த மாசம் வட்டியை எப்படி கொடுப்ப என் கடனை எப்படி கொடுப்ப நீ ஊரை விட்டு காலி பண்ணி ஓட்டிட்ட நான் என்ன பண்ணுவேன் என்று சொல்ல அப்படி எல்லாம் போக மாட்டோம் என்று கண்டிப்பாக உங்களுக்கு அடுத்த மாசம் வட்டி கொடுத்துடுவேன் என நந்தினி சொல்ல உங்களை எப்படி நான் நம்ப முடியும் நீங்க என்ன என் மாமா பொண்ணா இல்ல சித்தப்பா பெரியப்பா பொண்ணா என்னால நம்ப முடியாது இப்ப என்ன பண்றேன்னா இந்த பொண்ணு இங்கே இருக்கட்டும் நீ போய் வட்டியோட என் பணத்தை எடுத்துக்கிட்டு வா என்று விஜியிடம் சொல்ல உடனே இருவரும் அதிர்ச்சடைகின்றனர்.விஜி எவ்வளவு சொல்லியும் டெல்லி கேட்காததால் வேறு வழி இல்லாமல் நந்தினியை வீட்டில் விட்டுவிட்டு விஜி கிளம்புகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இவதான் என் மகாராணி என டெல்லி நந்தினியை பார்த்து சொல்ல, என்னன்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க உங்களை நம்பி தானே வந்தேன் என நந்தினி சொல்ல, விஜி சூர்யாவை அழைத்துக் கொண்டு பணத்துடன் டெல்லி வீட்டுக்கு வருகிறார்.
சூர்யா பணத்தை கொடுத்தவுடன் நந்தினி அனுப்பச் சொல்ல நீ யாரு என்று கேட்க விஜி இவர்தான் நந்தினியோட என ஆரம்பிக்க அமைதியாக இருக்கச் சொல்லுகிறார் பிறகு விஜி வீட்டில் சூர்யா நந்தினி விஜி என மூவரும் இருக்க விஜி சூர்யாவை பார்த்து உங்களுக்கு நந்தினியை தொட்டு தாலி கட்டின பொண்டாட்டின்னு சொல்றதுக்கு வெக்கமா இருக்கா என்று கேட்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
