பிரம்மாண்டமாக தொடங்கிய கல்யாணம், சூர்யா வாழ்க்கையில் நடக்கப் போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவியும்,சுரேகாவும் சூர்யாவிடம் உனக்காக தான் இந்த கல்யாணத்தை நிறுத்த போராடிக்கிட்டு இருக்கோம். நீதான் அர்ச்சனா ஒரு அழகுல மயங்கி கிடக்கிற. அர்ச்சனாவோட அப்பா கால்ல விழுந்ததுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என் தம்பி தான் எனக்கு முக்கியம். உனக்கு அம்மா பண்ண துரோகம் எல்லாம் ஞாபகம் இல்ல, நீ அர்ச்சனா கழுத்துல தாலி கட்டு அம்மா கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வரும் அதை பாரு என்று சொல்ல,சிரித்தபடி சூர்யா ஆமா அர்ச்சனா கழுத்துல நான் தாலி கட்டுவேன் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு, கட்டுன உடனே அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவேன், புரியலல்லா உங்க யாருக்கும் புரியல இல்ல மறுநாள் டைவர்ஸ் கொடுப்பேன். அப்போ உங்கம்மா கண்ணுல ஆனந்த கண்ணீர் வராது, ரத்தக்கண்ணீர் தான் வரும். இந்த ஊர் உலகம் முன்னாடி அவங்க அசிங்கப்பட்டு நிக்கணும் இதுக்கு மேல தான் தரமான சம்பவமே காத்துகிட்டு இருக்கு என்று பேசி, புரிஞ்சுதா என்று சொல்லிவிட்டு இங்க இருந்து கிளம்புங்க என்று அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் குடிக்கிறார்.
மறுபக்கம் கல்யாணம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க நந்தினியும் வீட்டு வேலை செய்பவரும் அவரை தண்ணீர் தெளித்து எழுப்புகின்றனர். இவ்வளவு இடம் இருக்கிறப்போ இங்கேயே படுத்து தூங்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல நீங்க அப்பதானே வேலை வாங்காம இருப்பீங்க என்று சொல்லுகிறார். நந்தினி இது நம்ம முதலாளி கல்யாணம் நம்ம தான் அண்ணன் முன்னாடி நிக்கணும் என்று சொல்ல போய் நில்லும்மா என்று சொல்லிவிட்டு இப்ப என்ன வேலை பார்க்கணும் அவ்வளவுதானே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். சூர்யாவும் அவரது நண்பரும் தூங்கிக் கொண்டிருக்க அருணாச்சலம் சூர்யாவையும் நண்பரையும் எழுப்பி விடுகிறார். டைம் ஆயிடுச்சு சீக்கிரம் எழுந்திருங்க என்று சொல்லி எழுப்ப சூர்யா அருணாச்சலத்திடம் காபி கேட்கிறார். சரி நான் எடுத்துட்டு வரேன் என்று கிளம்ப நந்தினி காபியுடன் வந்து வாசலில் நிற்கிறார். சரி குடும்மா நான் கொடுக்கிறேன் என்று வாங்கி சூர்யாவிடம் கொடுத்துவிட்டு அருணாச்சலம் கிளம்புகிறார்.
நந்தினி அனைவரும் ஜூஸ் காபி கொடுத்து கவனித்துக் கொண்டிருக்க சூர்யாவின் நண்பர் சூர்யாவிற்கு பட்டு வேட்டி சட்டையை ஏடாகூடமாக சொறிவி விடுகிறார். உடனே அருணாச்சலம் போன் கூட ரெடி ஆயிட்டியா என்று கேட்க ஆ,ரெடி ஆகிட்டே இருக்கேன் பா என்று பேசிவிட்டு போனை வைக்க அந்த வேஸ்டி எல்லாம் எவன்டா வாங்குனது என்று நண்பர் கேட்ட கதவைத் திறந்த அருணாச்சலம் நான்தான் வாங்கினேன் என்று சொல்லிவிட்டு நீ போ நான் கட்டிவிடுறேன் என்று அனுப்பி வைக்கிறார்.
சூர்யாவிற்கு அருணாச்சலம் வேஷ்டியை எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே கட்டிவிட சூரியா ஆசையாக அப்பாவை பார்க்கிறார். பிறகு கண்ணாடியில் சூப்பரா இருக்க சூர்யா அழகா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் உடனே கண் கலங்குகிறார். சூர்யா என்னாச்சு டாடி என்ன ஆச்சு என்று கேட்க இப்பதான் நீ பொறந்து டவுசர் போட்டு வந்து நின்ன மாதிரி இருக்கு ஆனா இப்ப வேஷ்டி சட்டையில் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு சூர்யா என்று சொல்லுகிறார்.
மேலும் சின்ன வயதில் நடந்த விஷயங்களை சூர்யாவிடம் சொல்ல சூர்யா எமோஷனல் ஆகிறார். ஒரு தடவை நீ தொண்டையில் ஏதோ சிக்கிக்கிட்டு மூச்சு விடாம இருந்த சூர்யா. அந்த நேரத்துல வெளியே கார் பைக் எல்லாமே இருந்தது ஆனா உன்ன தோல் மேல தூக்கிக்கிட்டு ஆறு கிலோ மீட்டர் ஓடுனேன் ஆனா அப்படி ஓடியதால உன் தொண்டையில் இருந்தது வைத்துக்கொள்ள போயிடுச்சு அதனால பிரச்சனை இல்ல என்று டாக்டர் சொன்னாங்க.அப்ப கூட உன்ன காப்பாத்தணும் மட்டும் தான் எனக்கு தோணுச்சு தவிர உன்னை கார்ல கூட்டிட்டு போகணும்னு எனக்கு தோணல என்று சொல்லிவிட்டு கண் கலங்க சூரியா அருணாச்சலத்தை கட்டி பிடித்து அழுகிறார். நீ ஒரு நல்ல பையனா இதுவரைக்கும் இருந்திருக்க ஆனால் இதுக்கப்புறம் நீ ஒரு நல்ல அப்பாவா மாறனும்னு எனக்கு ஆசை இருக்கு சூர்யா என்று சொல்ல டாட் என்று ஆரம்பிக்க என்ன சூர்யா எனக்கு மனசுக்கு தோணுச்சு நான் சொல்றேன், நீ, அர்ச்சனா, குழந்தை என நீங்க சந்தோஷமா வாழனும் கண்டிப்பா நீ மாறி தான் ஆகணும் என்று சூர்யாவின் அப்பா சொல்லுகிறார். இதெல்லாம் ஏன் சொல்லணும்னு தோணுச்சுன்னு எனக்கு தெரியல அதனால உன்கிட்ட சொன்னேன் என்று சொல்ல அருணாச்சலத்திற்கு சூர்யா கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.
நந்தின எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க மாதவியும் சுரேகாவும் வந்து நந்தினி இடம் இதுல கொஞ்சம் நகையெல்லாம் இருக்கு, நீ என் கூடவே இரு நான் கேட்கும்போது குடு என்று அந்த பேகை கையில் கொடுக்கிறார். நந்தினியிடம் இருக்கும் காப்பியை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு நந்தினி அந்த பேக்குடன் மாதவி பின்னாடியே வருகிறார். சூர்யா மனக்கோலத்தில் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி மணமேடையில் உட்காருகிறார். ஐயர் அம்மா அப்பாக்கு பாத பூஜை பண்ணுங்க என்று சொல்ல சூர்யா அப்பாவிற்கு மட்டும் பண்ணுகிறார். அம்மாவிற்கும் அப்படியே பண்ணுங்க என்று ஐயர் சொல்ல, உங்களுக்கு வேணா கூட பண்ணுவேன் ஆனா அவங்களுக்கு பண்ண மாட்டேன் என்று உறுதியாக சொல்லுகிறார். சூர்யாவிடம் படம் பிடிக்காத சூர்யா என்று சொல்ல டாடி ப்ளீஸ் என்று வாயை அடைக்கிறார். நீங்க செய்ய வேண்டியது செய்யுங்க என்று ஐயரிடம் சொல்ல சுந்தரவள்ளையும் அப்படியே சொல்லுகிறார். அதன் பிறகு சூர்யா கிளம்பி விட அர்ச்சனா வந்து உட்கார்ந்து அவர்களது அப்பா அம்மாவிற்கு பாத பூஜை செய்ய, அவர்கள் அர்ச்சனா விற்கு ஆசிர்வாதம் செய்கின்றனர் இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்றைய ப்ரோமோவில் சூர்யா அர்ச்சனா கல்யாணம் பிரம்மாண்டமா தொடங்குச்சி, இந்த கல்யாணம் நடக்க எந்த ஒரு அவமானத்தையும் தாங்கிக்கிட்டா நந்தினி.
சூர்யாவின் கல்யாணம் நடக்கக்கூடாது என்று ஒரு பக்கம் மாதவியின் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சி மாதவியோட எண்ணத்தை நிறைவேற்றப் போகுதா இல்ல சூர்யாவோட வாழ்க்கையில மாற்றத்தை கொண்டு வரப் போகுதா? பரபரப்பான திருப்பங்களுடன் நடக்கப் போவது என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.