வேட்டையன் படம் குறித்து ஒரே வார்த்தையில் தனுஷ் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!

வேட்டையன் படம் குறித்து ஒரே வார்த்தையில் தனுஷ் புகழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் அமிதாப்பச்சன், பகத் பாஸில், துஷாரா விஜயன், ரானா டகுபதி, ரித்திகா சிங் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush About Vettaiyan Movie Update
Dhanush About Vettaiyan Movie Update

இந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தனுஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் #vettaiyan Day! #Superstar “தலைவர் தரிசனம்”என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் ஒன்று சேர இருப்பதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.