சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, மாதவி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு ஆம்லெட் போட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க இதனை பார்த்த புஷ்பா சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். பிறகு நந்தினி சொன்னபடி சூர்யாவும் ஆம்லெட் ஊத்துகிறார். கிச்சன் பக்கமே எட்டி பாக்காத சின்னையா நந்தினி சமைக்க வச்சிக்கிட்டு இருக்கா, சின்னய்யாவும் அவளுக்காக சமைச்சு கொடுத்துக்கிட்டு இருக்காரு என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக வெளியே வருகிறார் . சுந்தரவல்லி பார்த்த முறைத்துக் கொண்டிருக்க, சூர்யா பார்த்து விட உடனே நந்துமா டெய்லி எனக்கு இது மாதிரி ஒரு ஃபுட்டு சொல்லி கொடு உனக்கு செஞ்சு தரேன் என்று சொல்லி கொஞ்சுகிறார். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் சேர்ந்து சமைச்சா சூப்பரா இருக்கு இல்ல என்று கேட்க அப்புறம் என்ன பண்ணனும் சொல்லு என்று சொல்லி திருப்பி போடணும் என்று நந்தினி சொல்லுகிறார். பிறகு இருவரும் ஆம்லேட்டை திருப்பி போட்ட, பிறகு சூர்யா நந்தினியை பிடித்துக் கொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடுகிறார்.
இது மட்டும் இல்லாம இந்த வீட்ல இருக்குறவங்கள ஒவ்வொருத்தரையா டெய்லியும் வந்து உன்கிட்ட சமைக்க கத்துக்க சொல்றேன் சொல்லி குடுக்குறியா தங்கம் என்று கொஞ்ச அங்கிருந்து சுந்தரவல்லி கோபமாக கிளம்புகிறார். ரூமுக்குள் வந்த சுந்தரவல்லி கல்யாணத்தன்று நடந்ததையும் இப்போ நடக்கிறதையும் யோசித்துப் பார்த்து கடுப்பாகி கண்ணாடி முன் உன்ன பாத்தா உனக்கே அறிவுறுப்பா இல்லையா, உன்னுடைய வேலைக்காரி உன் எதிர்ல மருமகளா உலாத்திக்கிட்டு இருக்கா, என்னால ஒண்ணுமே பண்ண முடியல டென்ஷனா இருக்கு என்று கத்தி விட்டு பிரண்டுக்கு போன் போட்டு தலை வெடிக்கிற அளவுக்கு பிரச்சனையா இருக்கு என்று பேசுகிறார். என் பையனே என்னை எதிர்த்து அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டு இருக்கான். எதுவுமே என் கண்ட்ரோலில் இல்லை , என்னை என்ன பண்ண சொல்ற என்று கோபமாக பேச இப்ப நீ போனை வச்சுட்டு நிம்மதியா தூங்கு நான் காலையில வந்து பாத்துக்குறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.
மறுநாள் காலையில் நந்தினி கோலம் போட்டுக் கொண்டிருக்க சுந்தரவள்ளியின் தோழி வருகிறார். சுந்தரவல்லி அவரை வாசலில் இருந்து வரவேற்று அழைத்துச் சென்று பேசுகிறார். நீ பெரிய விஷயங்களை டீல் பண்ணி உனக்கு சின்ன விஷயங்களை பத்தி எதுவுமே தெரியல இதையெல்லாம் இறங்கி தான் அடிக்கணும். என்ன பண்ணனும் என்று சுந்தரவல்லி கேட்க, அவள வேலையால அடிக்க கூடாது சுயமரியாதையால் அடிக்கணும் அப்பதான் சுருக்குன்னு இருக்கும் என்று சொல்லுகிறார். என்ன சொல்ற எனக்கு புரியல என்று சொல்ல இப்போ உனக்கு புரிய வைக்கிறான் பாரு என்று சொல்லி நந்தினியை கூப்பிடுகிறார். என்ன பண்ணிட்டு இருந்த என்று கேட்க கோலம் போட்டுக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல அதுதானே வழக்கமென்று சொல்லுகிறார். நீ கோலம் போட்டு தான் இந்த வீடு அழகாக போகுது அப்படித்தானே என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லம்மா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க என்று சொன்ன கேட்டுக்கோ சுந்தரவல்லி நம்ம பேசுறது எல்லாம் தப்பு அவ பேசுறது கரெக்ட் என்று சொல்லி பக்கெட்ல தண்ணி இருக்கா என்று கேட்டு இருக்கு என்று சொல்லாதே எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார்.
நந்தினியிடம் பக்கெட்டை கொடுத்து இந்த கோலத்தை கலைத்து விடு என்று சொல்ல கோலம் போட்டு அழகாக தனமா இருக்கும் ஏன் கலைக்கணும் என்று சொல்ல நல்ல இருக்கிறவங்க போடலாம் ஆனா உனக்கு நல்ல எண்ணம் கிடையாது என்று சொல்லி கோலத்தை கலைக்க சொல்லுகிறார். நந்தினியும் வேறு வழி இல்லாமல் கோலத்தின் மேல் தண்ணீர் ஊற்றி விட, நீ போய் உள்ள வேலை பாரு என்று அனுப்பி வைக்கிறார்.அங்கு வந்த சுந்தரவல்லி இடம் அவ்வளவுதான் சுந்தரவல்லி இப்போ அவளுக்கு எது வலிச்சிருக்கோம்னு சொல்லு பாக்கலாம் என்று சொல்ல கோலம் கலச்சது தானே என்று சொல்லுகிறார். அதுவும் தான் ஆனால் நான் சொன்ன முதல்ல எனக்கு நல்ல எண்ணம் இல்லைன்னு சொன்னது தான் அவளுக்கு சுருக்குனு இருந்திருக்கும் நான் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு சொல்லி தரேன் நான் கிளம்புறேன் என்று சொல்ல நந்தினி உள்ளே சென்று சுந்தரவல்லி தோழி சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார்.
இந்த போதையால தான் என் வாழ்க்கையே போச்சு குடிச்சுட்டு என்ன செய்யணும்னு தெரியாம செஞ்சி என் வாழ்க்கையே போயிடுச்சு எல்லாத்துக்கும் காரணம் இந்த போதை தான் என்று நந்தினி வந்து சூர்யா கையில் இருக்கும் பாட்டிலையும் ரூமில் இருக்கும் பாட்டிலையும் எடுத்து மறைத்து வைக்கிறார். உடனே ரூமை பெருக்கிக் கொண்டிருக்கும் சூர்யா அந்த நேரம் பார்த்து கண் முழித்து சரக்கு பாட்டிலை தேடுகிறார். கையில் இருக்கும் பாட்டிலை முதலில் தேட சரி அது இல்லாம போனா பரவால்ல சைடுல இருக்கும் என்று கையை விட அங்கும் எதுவும் இல்லாமல் இருப்பதை பார்த்து சூர்யா அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சூர்யா சரக்கு பாட்டலை தேடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அவளை டார்ச்சர் பண்ணனும் அத நான் பார்த்து ரசிக்கணும் என்று சுந்தரவல்லி மாதவி மற்றும் சுரேகாவிடம் சொல்லுகிறார்.
சூர்யா நந்தினி இடம் எங்கேயாவது எடுத்து வச்சிருக்கியா என்று கேட்க நான் எதுக்கு சார் அத தொட போறேன் என்று சொல்லிவிடுகிறார். நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க என்ன செய்யலாம் என்று மாதவி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.