பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ..!
பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க பண்ணது ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு என்று சொல்ல தர்ஷிகா சண்டைக்கு வர நான் உன்னை எதுவுமே சொல்லல என்று சொல்லுகிறார். பிறகு தர்ஷிகா கோபமாக உள்ளே சென்றுவிட, மற்ற மாணவர்கள் பிரின்சிபல் மேடம் சாரி கேக்கணும் என்று போராட்டம் செய்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram