Pushpa 2

முத்து கொடுத்த ஷாக்,வீட்டுக்கு ஓடி வந்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து ஷாக் கொடுக்க விஜயா பதறி அடித்து ஓடிள்ளார்.

siragadikka asai serial episode update

siragadikka asai serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினியும் வித்யாவும் விஜயா என்ன காரணத்திற்காக வாபஸ் வாங்கி இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிட்டி போன் போட்டு பணம் பற்றி பேசுகிறார்.என்கிட்ட இப்போ இல்ல நான் ரெடி பண்ணி தான் தரணும் என்று சொல்ல நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். ரோகிணி என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் விஜயாவை வந்து பார்க்க மீனாவின் குடும்பத்தினர் முத்து என அனைவரும் வருகின்றனர். விஜயா இவங்க ஏன் பார்வதி இங்க எல்லாம் வராங்க என்று கேட்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்பதற்காக தான் வந்தோம் அத்தை என்று மீனா சொல்லுகிறார். நீங்க மன்னிக்கிற அளவுக்கு தப்பா பண்ணி இருக்கீங்க என்று விஜயா கேட்க அப்போ உங்க பையன் மனோஜ் பண்ணது எவ்ளோ பெரிய தப்பு அதை இவங்க மன்னிக்கலையா என்று கேட்கிறார். மீனாவின் அம்மா சத்யா பண்ணது தப்புதான் மன்னிச்சிடுங்க என்று மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். சீதாவும் சத்யாவும் மன்னிப்பு கேட்க பிறகு முத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதான் பிரச்சினை சரியாயிடுச்சு இல்ல வீட்டுக்கு வாங்க என்று விஜயாவை கூப்பிடுகிறார். அப்பா நீங்க இல்லாம கஷ்டபடுறாரு என்று சொல்ல அதுக்கு நான் வரும்போது தடுத்து இருக்கணும் என்று சொல்லுகிறார். உடனே பார்வதியிடம் அப்படிதான் அப்பாவோட பிரண்டு ஒருத்தர் அவங்க வைஃப் கூப்பிட்டு பார்த்து வரலன்னு தெரிஞ்ச உடனே டைவர்ஸ் பண்ணிட்டாரு என்று சொல்ல உடனே விஜயா அதிர்ச்சியாகி நிற்கிறார். சரி வா நீ நான் நம்ப போகலாம் என்று வெளியே போக, விஜயா பார்வதியிடம் அவரு அப்படி பண்ண மாட்டாரு என்று சொல்ல பண்ணாலும் பண்ணுவாரு என்று சொன்னவுடன் விஜயா வேகமாக பேக் எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்.

உடனே விஜயா வீட்டுக்கு வர இதை பார்த்த முத்து வேகமாக ஓடிக்கொண்டு கேஸ்வலாக இருப்பது போல் அவரை வெளியே நிற்க வைக்கிறார். விஜயா நான் ஏன் உள்ள வரக்கூடாது என்று கேட்க அனைவரும் எதுக்கு வர வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்கின்றனர். உடனே முத்து மீனாவிடம் போய் ஆரத்தி கரத்தை எடுத்துட்டு வா என்று சொல்ல, எப்பவுமே சண்டைக்கு ஊருக்கு போயிட்டு வந்து ஆரத்தி எடுத்து தானே உள்ள அனுப்புவாங்க அம்மா தான் சண்டை போட்டு போனாங்கள்ள அதனாலதான் ஆரத்தி எடுக்க சொல்றேன் என்று சொல்லி எடுக்க சொல்ல விஜயா ஸ்ருதியையும் கூப்பிட மூவரும் ஆரத்தி எடுக்கின்றனர்.

விஜயா வீட்டுக்கு வந்து உட்கார நீங்க கொஞ்சம் எலச்ச மாதிரி இருக்கீங்க என்று சொல்ல அதற்கு அண்ணாமலையும் அப்படித்தான் இருக்க விஜயா என்று சொல்லுகிறார். முத்து மீனாவின் சாப்பாடு இல்லனா அப்படித்தான் இருக்கும் என்று சொல்லுகிறார். விஜயா கோபமாக பேச விளையாட்டுக்கு சொன்ன ஏமா டென்ஷன் ஆகுறீங்க என்று சொன்னவுடன் ஸ்ருதி உடனே திருப்பி பேக தூக்கிட்டு ஓடிடாதீங்க என்ற கிண்டல் பண்ணுகிறார். ஆமா அன்னிக்கு நான் ரவி கூட சண்டை போட்ட அப்போ எங்க அம்மா வீட்டுக்கு போனதுக்கு என்னை அப்படி திட்டினீங்க ஆனா இப்ப நீங்க என்ன பண்ணிங்க என்று கேட்க விஜயா வாய் பேச முடியாமல் முழிக்கிறார்.

பிறகு வீட்டில் இருப்பவர்கள் என்ன கேட்கிறார்கள்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update

siragadikka asai serial episode update