மோகன்லாலின் மகள் விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகம்..
மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகள் விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டுள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் ஆர்வமாக இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து, ‘கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் ‘பெஸ்ட் செல்லர்’ பிரிவிலும் இப்புத்தகம் இடம்பிடித்தது.
தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. ‘மொய் தாய்’ என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி வீடியோக்களை விஸ்மயா ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு சினிமாவுக்காக ஆயத்தமாகி வந்த விஸ்மயா தற்போது கதாநாயகி ஆகியுள்ளார். அதாவது, ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயின் ஆகியுள்ளார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37-வது படமாகும்.
விஸ்மயாவின் சகோதரர் பிரணவ் மோகன்லாலின் அறிமுகப் படம் ‘ஆதி’ என்ற அதிரடிப் படமாகும். ஜீத்து ஜோசப் இயக்கிய இப் படம் 2018-ம் ஆண்டு வெளியானது. ஒரு சூப்பர் ஸ்டாரின் மகன் என்கிற பந்தா இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புபவர் பிரணவ்.
மோகன்லால், தற்போது மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தன.
லூசிஃபரின் தொடர்ச்சியாக, பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலின் ‘எம்புரான்’ திரைப்படம் மலையாள திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. இதையடுத்து, தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘துடரும்’ திரைப்படம் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
