ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..
இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ தான் அதிக வசூலை அள்ளியது. மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால், அடுத்து ரிலீஸாகும் படங்களின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. அவ்வகையில் என்னென்ன படங்கள் ரிலீஸாக உள்ளது என காண்போம்.
ஜூலை மாதத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த ‘3பிஹெச்கே’ திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் ஜூலை 4-ந் தேதி ரிலீஸாது. இதனுடன் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த ‘பறந்து போ’ படமும் ரிலீஸாகிறது.
மேலும், விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்’ படமும் ஜூலை 4-ந்தேதி திரைக்கு வருகிறது. இதுதவிர விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வருகிற ஜூலை 25-ந்தேதி ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஜூலை 11-ந்தேதி எழில் இயக்கிய ‘தேசிங்கு ராஜா-2’ திரைப்படம் ரிலீஸாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக வெளியான டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வரவேற்பையும் நல்ல வசூலையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
