Minister S.P. Velumani : Political News, S.P. Velumani, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Latest news

Minister S.P. Velumani :

சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள், மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்காங்கே வறட்சி,தண்ணீர் பஞ்சம் போன்றவை தலைவிரித்தாடுகிறது. கிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்ததால், மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு ஆளாகினர். பல்வேறு இடங்களில் மழை வேண்டி யாகங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க சுமார் 63 கோடி ரூபாய் செலவில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து !

இந்நிலையில் பருவமழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது. இது தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மழை நீர் சேமிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கு விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால், மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது எளிதல்ல.

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவதின் காரணம் தெரியுமா உங்களுக்கு?

மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம் என உறுதி கொள்வோம்!! இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும் என மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டிவிட்டரில் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.