Arugampul Maalai

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவதின் காரணம்:

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும், காய்ந்து போய் காணப்படுமே தவிர, அழிந்து போகாது.

சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்வார்கள்.

புராண காரணம்:

* எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன்,  தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையுறாக இருந்து வந்தான்.

* அவன் வாயிலிருந்து அக்னியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசூழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம், அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள்.

* விநாயகரும், பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.

விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

* வயிற்றுக்குள் சென்ற அரக்கன் வயிற்றை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அவனுடைய வெப்பத்தை தாங்க முடியாததால், அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

* இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான்.

* அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது. ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here