Master Release Date Details
Master Release Date Details

ஊரடங்குக்கு நடுவே மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

Master Release Date Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், மகேந்திரன், சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

போனி கபூரின் அடுத்த தமிழ் இயக்குனர், ஹீரோ இவர் தான் – அப்போ அஜித் இல்லையா? வெளியான பரபரப்பு தகவல்.!

இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது.

இதனால் படம் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று வரை நிலைமை சீராகவில்லை.

இதனால் ஜூன் 22 க்கும் படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. தீபாவளிக்கும் கொரானா வைரஸ் நிலைமை சரியாவது கேள்வி குறி தான் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக படக்குழு மாஸ்டர் படத்தை அடுத்த ஆண்டு அதாவது 2021-ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

படம் தள்ளிப் போனாலும் தொடர் விடுமுறையான பொங்கலில் வெளியாவது நிச்சயம் சாதனை படைக்க சரியாக இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றிய அறிவிப்பு ஜூன் 22-ல் வெளியாகலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.