Boney Kapoor in Next Tamil Movie
Boney Kapoor in Next Tamil Movie

போனி கபூரின் அடுத்த ஹீரோ மற்றும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Boney Kapoor in Next Tamil Movie : பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் போனி கபூர். இவர் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தமிழ் தயாரிப்பாளராக கால்பதித்தார்.

இதனையடுத்து மீண்டும் தல அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தமிழில் யாரை வைத்து படம் தயாரிப்பார் என்று கேள்வி எழுந்து இருந்தது.

மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு.. அவரின் மனைவி கிகி வெளியிட்ட மீம்ஸ்.!

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி போனி கபூர் கையில் வைத்துள்ள ஆர்டிக்கல் 15 என்ற படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்க இருப்பதாகவும் இந்த படத்தை கனா படத்தின் இயக்குனரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.