Master New Release Date
Master New Release Date

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Master New Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸாக முடியாமல் இருந்து வருகிறது.

ரசிகர்களுக்கே தெரியாமல் ரசிகர்களுடன் சேர்ந்து தன்னுடைய ஹிட் படத்தை பார்த்த தளபதி விஜய் – வெளியான அரிய புகைப்படம்.!

இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸாக இன்னும் எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.