Master Censor Details
Master Censor Details

மாஸ்டர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டது போல சமூக வலைதளங்களில் சான்றிதழ் என்று வைரலாகி வருகிறது.

Master Censor Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்தது.

நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்த விஜய்.. அஜித் நடித்து ஹிட்டான திரைப்படம் – இந்த மெஹா ஹிட் படத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்கு!

ஆனால் இந்தியாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படங்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 181.02 நிமிடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தச் சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் மற்றும் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நீ ஒருத்தன் போதும் டா.. மாஸ்டர் பட டிரெய்லர் குறித்து கனகராஜ் பதிவிட்ட ட்வீட்.!

மாளவிகா மோகனன் நாயகியாக நடித்த ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், மகேந்திரன், சஞ்சீவ், பிரேம், ரம்யா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ள விஜய் அதற்கு அடுத்த படத்தை அதாவது தளபதி 66 படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

Master Censor Details
Master Censor Details