ரஜினியுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சுவாரியார் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!
ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சு வாரியார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் இந்த படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய மனசிலாயப் பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மஞ்சு வாரியார் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றே போட்டுள்ளார்.
அதில், தலைமுறைகளை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, ரஜினி சார் அன்பும் மரியாதையும் ,எப்போதும்.. என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
View this post on Instagram