மீண்டும் ‘அலைபாயுதே’ போல, ஒரு காதல் கதை: மணிரத்னம் இயக்கும் அடுத்த படம்..

Web Ads

அடுத்து, காதல் கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் மணிரத்னம். இது குறித்த அப்டேட் பார்ப்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன்.

அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை இரண்டும் சரியாக அமைந்தால், புதிய படத்தை இயக்குவேன்’ என கூறியுள்ளார்.

இச்சூழலில், மணிரத்னத்தின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி பெயரும், கதாநாயகியாக நடிக்க நடிகைகள் ருக்மணி வசந்த் அல்லது சாய்பல்லவி பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகும் என்றும், நகரப் பின்னணியில் நடக்கும் ஒரு மென்மையான காதல் கதையை மையப்படுத்தி இந்த படம் இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அவ்வகையில், மீண்டும் அலைபாயுதே படம்போல, ஒரு புதிய காதல் அனுபவம் ரசிகர்களை ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

maniratnam reveals his next film after thug life
maniratnam reveals his next film after thug life