மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மணிரத்னம், விஜய் சேதுபதி இருவரும் இணையும் படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம், விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இச்சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்திலும் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நாளைமுதல் தொடங்குகிறது.

