Web Ad 2

மலேசியாவில் அஜித்துடன் சிம்பு சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அங்கு இயக்குநர்கள் சிவா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி வருகின்றார். மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தை சிவா இயக்கவுள்ளார்.
அதற்காக இருவரும் மலேசியாவில் அஜித்துடன் இருக்கின்றனர் என கூறப்படுகிறது.

தற்போது, சிம்புவும் அஜித்தை மலேசியாவில் சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவும் தற்போது மலேசியாவில் தான் இருக்கின்றார். அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் இடத்திற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மற்றும் சிம்பு சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. சிம்பு ஆரம்பகாலகட்டங்களில் தன் ஒவ்வொரு படங்களிலும் அஜித் ரெபரென்ஸ் பயன்படுத்தி வந்தார். தான் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பதை படத்திற்கு படம் குறிப்பிட்டு வந்தார் சிம்பு. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தற்போது சந்தித்திருக்கும் வீடியோக்கள் இரு நடிகர்களின் ரசிகர்களாலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் வருகிற 9-ந் தேதி துவங்க இருப்பதாக கூறியிருக்கின்றார். இது அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
மேலும், விஜய் சேதுபதி சிம்புவுடன் இணைந்து இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.

அஜித் நடிப்பில் அடுத்ததாக AK64 என்ற திரைப்படம் தயாராகவுள்ளது. இப்படத்தை மீண்டும் ஆதிக் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதமும் படப்பிடிப்பு பிப்ரவரி மாதமும் துவங்க இருக்கிறது. அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையில் இப்படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

malesiya in ajith and simbu meet
malesiya in ajith and simbu meet