நெகட்டிவ் ரோலில் மம்முட்டி நடிக்கும் ‘களம் காவல்’ படத்தின் அப்டேட்ஸ்..

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது. குறிப்பாக, இப்படத்தில் துல்கரின் சிறந்த நடிப்பு பாராட்டுகளை குவித்திருக்கிறது. இந்நிலையில், இவரது தந்தையான மம்முட்டி நடித்த ‘களம் காவல்’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது.
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே. ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டியின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்முட்டி வருகிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது. அண்மையில், படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

