Mafia Movie Review
Mafia Movie Review
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஃபியா. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Mafia Movie Review : 

படத்தின் கதைக்களம் :

ஹீரோவான அருண் விஜய் போதை பொருள் தடுப்பு பிறவு அதிகாரியாக இருக்கிறார். அவருடைய டீமில் ஒரு இளைஞர் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரசன்னா போதை பொருள் கடத்தல் செய்பவராக இருக்கிறார். அருண் விஜய் கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் இருப்பதை கண்டறிந்து இதற்கு யார் காரணம் என அலசுகிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு ஐடியா கிடைத்து பிரசன்னாவை தன்னிடம் வரவைக்க திட்டம் போடுகிறார். ஆனால் பிரசன்னா ஒரு திட்டம் போட்டு அருண் விஜய் குடும்பத்தை தூக்கி விடுகிறார்.

அதன் பின்னர் என்னவானது? அருண் விஜய் எப்படி பிரசன்னாவை பிடிக்கிறார்? தன்னுடைய குடும்பத்தை மீட்டாரா? என்பது தான் மீதி கதை.

அந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா? பிரியா பவானி ஷங்கரின் அதிர்ச்சி பதில்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

அருண் விஜய் பிட்டான போலீசாக மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்கிறார்.

வில்லன் பிரசன்னா அவருடைய வேலையை கச்சிதமாக செய்துள்ளார். ஆனால் இன்னும் மிரட்டலான வில்லனாக அவரை பயன்படுத்தி இருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

தொழில்நுட்பம் :

இசை :

Jakes Bejoy பின்னணி இசை ஓகே. பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

Gokul Benoy வித்தியாசமான கோணத்தில் சிறப்பாக காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

எடிட்டிங் :

ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் சூப்பர்.

இயக்கம் :

கார்த்திக் நரேன் வழக்கமான கடத்தல் கதையை கையில் எடுத்திருந்தாலும் அதனை வித்தியாசமாக கையாண்டுள்ளார். முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்ட தவறினாலும் இரண்டாம் பாதியில் நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டுகள் வேற லெவல்.

தம்ப்ஸ் அப் :

1. அருண் விஜய், பிரசன்னா நடிப்பு
2. கிளைமாக்ஸ் காட்சிகள்
3. படத்தின் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை
2. லாஜிக்கல் தவறுகள்

மொத்தத்தில் மாபியா முதல் பாதி சோதித்தாலும் இரண்டாம் பாதியில் நம்மை மிரட்டுகிறது.

ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர் – வைரலாகும் வீடியோ