Pushpa 2

மதகஜராஜா படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

மதகஜராஜா படத்தின் 11நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Madha Gaja Raja Movie 11 Day Box Office Update
Madha Gaja Raja Movie 11 Day Box Office Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.

சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது என்று சொல்லலாம். 15கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் 47.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 50 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Madha Gaja Raja Movie 11 Day Box Office Update
Madha Gaja Raja Movie 11 Day Box Office Update