மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக அறிவித்து படக்குழுவினர் கேக் வெட்டி செலபிரேட் செய்துள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி ட்ரெண்டிங்காகி வருகிறது.