Web Ads

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் குறித்த தகவல் காண்போம்..

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், ‘சில படங்களின் கதைகளை இப்போதே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படியொரு கதைக்களம் தான் எல்ஐசி. இது ஒரு டைம் டிராவல் படம். இதை ஒரு வருடம் கழித்து இயக்கிக் கொள்ளலாம் என இருக்க முடியாது. அதன் காரணமாகவே ஷுட்டிங்கை உடனடியாக துவங்கினோம்.

மேலும், நான் நெருக்கடியான சூழலில் இருந்தபோது, பிரதீப் ரங்கநாதனுக்கு நான் சொன்ன கதை பிடித்திருந்தது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கு கொண்டார். அவருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த கதையை சூர்யாவிடம் கூறி பிடிக்காமல் போனது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், பிரதீப் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்ற நிலையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, அப்பாவாக சீமான் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது மலேசியாவில் ஷுட் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இணையவாசிகள் ‘முன்னணி நடிகர்களுக்கு கதை மட்டுமல்ல, கமிட் ஆகும் மற்ற நடிகர்களும் பிடிக்க வேண்டும்’ எனவும் விமர்சித்து வருகின்றனர்.

love insurance kompany movie release update