விஜய் – சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் முக்கிய அப்டேட் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன். இதில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இரண்டு படங்களின் முக்கிய அப்டேட்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கேரக்டர் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் “எஸ்கே 21” திரைப்படம் ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருவதால் வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இரண்டு தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.