முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது.